அவதார் படத்தை ‘2டி’யில் தானே பார்த்தீர்கள்; 3டி, 4டி தொழில்நுட்பத்தில் கூட அந்த படம் வெளிவந்து பல நாடுகளில் சூப்பர் பணத்தை அள்ளியது. அவதார் போல காசு அள்ள ஹாங்காங்கில், பல கோடி செலவில், 3டியில் பலான படம் ஒன்று தயாராகி வருகிறது. பலான படங்கள் ‘சிடி’யில் வருவதெல்லாம் பழசு; இப்போது இன்டர்நெட்டை திறந்தால் லட்சக்கணக்கில் ‘சைட்’கள் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வளவு காசு ஓசைப்படாமல் வருவதே இந்த புற்றீசலுக்கு காரணம்.
இப்படிப்பட்ட வெப்சைட்களை திறந்தாலே, படங்களை பார்த்தாலே, அதிலும் வீடியோவை டவுன்லோடு செய்தாலே போதும் ஏகப்பட்ட காசு நம்மை அறியாமலேயே ‘பறிக்கப்பட்டு’ விடும். டெலிபோன் பில் வரும் போது தலையும் சுற்றும். ஓசி வெப்சைட்கள் பார்ப்போர் நாளடைவில், சில வெப்சைட்களில் ‘நைசாக’ பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்து விடுகின்றனர்; செக்ஸ் சேட்டிங் உண்டு. ‘வெப் கேமரா’ இருந்தால், லைவ் காட்சிகளும் உண்டு. இந்த பலான படங்கள் பெரும்பாலும் ஹாங்காங்கில் இருந்து தான் வெளிவருகின்றன.
இப்படி பணம் கொட்டுவதால், ஹாங்காங்கில் உள்ள பலான பட தயாரிப்பாளர்கள் 3டி தொழில்நுட்பத்தில் பலான சினிமா படங்களை எடுப்பதில் தீவிரமாக உள்ளனர். சீன இலக்கிய கதை ஒன்றை தழுவி, இளவரசியுடன் பலான காட்சிகளை சேர்த்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை சேர்ந்த ‘பலான’ நடிகர் சவோரி ஹரா தான் இதில் ஹீரோ; அவர் கதாநாயகியுடன் நளினமாக செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு நடிப்பதை, 3டி கண்ணாடி போட்டபடி, இயக்குனர் கிறிஸ்டோபர் கண்காணித்து வருகிறார். ‘படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டது. 3டி பலான படங்கள் சில வர இருந்தாலும், எங்களின் ‘தி கேமல் ப்ரேயர் மேட்’ தான் முதல் 3டி பலான படமாக இருக்கும். 3டி கண்ணாடி போட்டு ரசிகர்கள் பார்க்கும் சூப்பர் ‘ஏ’ படம் இதுவாகத்தான் இருக்கும்’ என்றார் மகிழ்ச்சி பொங்க இவர்.