3டியில் மிரட்டும் மீன்கள்
Published on August 20, 2010 by பிரபலம்.கொம் · No Comments

‘அவதார் படத்துக்கு பின் உலகம் முழுவதும் 3டி படத்துக்கு நல்ல வரவேற்பு. அந்த வரிசையில் இப்போது ‘பீரானா என்ற படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.நிலத்தில் டைனோசர் போல் நீருக்கடியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் மீன் இனம் பீரானா.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில் இந்த இன மீன்கள் மீண்டும் உயிர்பெற்று விடுகிறது. லேக் விக்டோரியா தீவில் கோடிக் கணக்கில் உற்பத்தியாகி சுற்றுலாத் தலமான அந்தப் பகுதியில் நீந்திக் களிக்கும் மக்களை கொன்று குவிக்கிறது. இதனை கடல் ஆராய்ச்சியாளரான எலிசபெத் ஷூ கண்டுபிடித்து அவற்றை எப்படி அழிக்கிறார் என்பது கதை. அலெக்சாண்டர் ஏஜா இயக்கி உள்ளார். ஆடம்ஸ் காட், ஜெசிகா, ஜோடர், ஸ்டீவன் நடித்துள்ளனர். ஆக. 27ம் தேதி ரிலீசாகிறது.