தெலுங்கு படத்தில் நடிக்கிறார் கார்த்தி
Published on August 23, 2010 by பிரபலம்.கொம் · No Comments

நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க, கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகின்றன. இதில் அவரே தெலுங்கில் டப்பிங் பேசுகிறார். இதையடுத்து தெலுங்கு ரசிகர்களை கவர, நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இவர் நடிக்கும் படத்தை ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்குகிறார்.
சத்ரபதி பிரசாத் தயாரிக்கிறார். இப்போது ராம்சரண் தேஜா நடிக்கும் ‘ஆரஞ்ச்’ படத்தை இயக்கி வருகிறார் பாஸ்கர். இதையடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.