Sunday, February 5th, 2012

அம்மனாக நடிக்கிறார் அனுஷ்கா

Published on August 23, 2010 by   ·   No Comments

கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் எஸ்.பி.சரண் வழங்க, வந்தனா மீடியா தயாரிக்கும் படம், ‘பஞ்சமுகி’. இதன் தயாரிப்பாளர் கே.வேணுகோபால், நிருபர்களிடம் கூறியதாவது: தெலுங்கில் நாகார்ஜுனா தயாரிப்பில் ரிலீஸான ‘பஞ்சாக்ஷரி’, தமிழில் ‘பஞ்சமுகி’ பெயரில் டப் ஆகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் 30 நிமிடம் இடம்பெறுகிறது. விஜய் சாம்ராட் ஹீரோ. பஞ்சாக்ஷரி, ஹனி ஆகிய வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி வி.சமுத்ரா இயக்குகிறார். சின்னா இசையில் தமிழமுதன் பாடல்கள் எழுதுகிறார். வசனம், ஈ.ராமதாஸ்.

வருடந்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று, அனுஷ்காவின் உடலுக்குள் அம்மன் புகுந்து குறிசொல்லும். அநியாயங்கள் செய்வோரை அடையாளம் காட்டுவதால், சம்பந்தப்பட்ட சிலர் அனுஷ்காவை தீர்த்துக் கட்டுகின்றனர். பிறகு இன்னொரு அனுஷ்கா, வில்லன்களை கண்டுபிடித்து பழிவாங்குவது கதை. அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam