மனைவியுடன் ஷூட்டிங் : தயக்கத்தில் ஷாரூக்!
Published on August 24, 2010 by பிரபலம்.கொம் · No Comments

இந்தியாவில் வெளி வரும் பெரும்பாலான விளம்பர படங்களில் தோனி, அமிதாப், பிபாஷா பாசு, கஜோல், அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் இவர்கள் தான் நடித்து வருகின்றனர். இவர்களில் பாலிவுட் சூப்பா ஸ்டாரான ஷாரூக் விளம்பர படங்களில் நடிப்பது மட்டும் தண்ணிபட்டபாடு.
ஆனால் ஒரே ஒரு விளம்பர படத்தில் மட்டும் நடிக்க தயக்கம் காட்டினாராம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனைவி கெளரி தான்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் தளத்தில் அவர் கூறுகையில், நான் எல்லோரிடமும் நடித்துள்ளேன். ஆனால் என் மனைவியுடன் நடைபெறும் முதல் ஷூட்டிங் என்பதால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும், அவருடன்(கௌரி) நடிக்க தயாராகி வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அடுத்து வரும் ஷாரூக் படங்களில் அவரது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். தன்னுடைய மனைவியுடன் நடிக்க இவ்வளவு தயக்கம் என்றால், தன் பிள்ளைகளுடன் நடிக்க எவ்வளவு தயக்கம் காட்டப் போகிறாரோ? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.