பிரகாஷ்ராஜ் திடீர் திருமணம்!
Published on August 24, 2010 by பிரபலம்.கொம் · No Comments

நடிகர் பிரகாஷ்ராஜும் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.
அதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ்க்கும், இந்திப்பட நடன இயக்குநர் போனிவர்மாவுக்கும் காதல் மலர்ந்து தற்போது அந்த காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.
இந்த திருமணம் மும்பையில் உள்ள மலாடு விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10.30மணிக்கு நடைபெற்றது. வேத, மந்திரங்கள் ஒத இந்து முறைப்படி போனிவர்மாவுக்கு தாலிகட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்ட, இந்த திருமணத்தில் இயக்குநர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.