Sunday, February 5th, 2012
Pirapalam.Com

தமிழ் படங்களை புறக்கணிக்கவில்லை – சந்தியா

Published on August 25, 2010 by   ·   No Comments

தமிழ் படங்களை புறக்கணிக்கவில்லை என்று சந்தியா கூறினார். சமீபகாலமாக தமிழ் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை சந்தியா. மலையாளத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாடுதான் என்னை நடிகையாக்கி வளர்த்தது. அதனால் தமிழ் படத்தை எப்போதும் புறக்கணிப்பதில்லை. சரியாக கணிக்காமல் சில படங்களில் நடித்து விட்டேன். இனி அதுபோல் தவறு நடக்கக் கூடாது என்பதற்காக கவனத்துடன் படத்தை தேர்வு செய்கிறேன். அதனால் சில படங்களை தவிர்த்தேன். இந்த இடைவெளியில் மூன்று மலையாளப் படங்கள் வந்ததால் அவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘காலேஜ் டே’ என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறேன். ‘சகஸ்ரம்’, ‘டிராபிக்’ படங்களில் வித்தியாசமான கேரக்டர்கள். அதுபோன்ற கேரக்டர்களை தமிழிலும் எதிர்பார்க்கிறேன். 18 வயதிலேயே மஞ்சள் வெயில் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்தேன். நல்ல நடிகையாக பெயர் எடுக்க எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm