விக்ரமுக்காக காத்திருக்கும் இயக்குனர்?
Published on August 25, 2010 by பிரபலம்.கொம் · No Comments

இயக்குனர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘பொம்மாலாட்டம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அர்ஜுன், நானே படாகர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதன் பிறகு இயக்குனர் பாராதிராஜா ரெட்டைச்சுழி என்ற படத்தில் நடித்தார். இவர் தற்போது ‘அப்பன் ஆத்தா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். மூன்று சகோதரர்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த படத்தில், சேரன், அமீர், சீமான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு விக்ரமிடம் பேசி வருகிறாராம் இயக்குனர் பாரதிராஜா.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் முதன் முறையாக ஒரு கிராமத்து கதைக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது. கிழக்கு சீமையிலே படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைத்த பாரதிராஜா ஹாரீஷையும் அழைத்து செல்கிறார்.