Sunday, February 5th, 2012
Pirapalam.Com

பயிற்சி என்ற பெயரில் சித்ரவதை செய்வதா? பிரியங்கா சோப்ரா மீது பாய்ச்சல்

Published on August 26, 2010 by   ·   No Comments

ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த ரியாலிட்டி ஷோ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. Ôஃபியர் ஃபேக்டர்Õ என்ற இந்த நிகழ்ச்சியில் அதிரடி சாகச காட்சிகளை பார்க்கலாம். திகிலூட்டும் ஆக்ஷனை நிஜமாகவே இதில் பங்கேற¢பவர்கள் செய்து முடிப்பார்கள். இத¤ல் பங்கேற்பவர்களை போட்டி மூலம் தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களை வழிகாட்டும் தலைவராக ஒருவர் இருப்பார். அந்த ரோலில் இதுவரை இந்தி நடிகர் அக்ஷய் குமார் செயல்பட்டு வந்தார். அவரது ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், இப்போது அந்த இடத்துக்கு பிரியங்கா சோப்ராவை நியமித்துள்ளனர். அவருடன் நடிகைகள், பிரபலங்கள் உள்பட 13 பெண் போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சமீபத்தில் பிரேசிலில் நடந்தது. கொபாகபனா என்ற கடற்கரை பகுதிகளில் ஷூட்டிங் நடந்தபோது, போட்டியாளர்களுடன் பிரியங்கா கடுமையாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி போட்டியாளர்களில் சிலர் கூறியதாவது: ஸ்டன்ட் காட்சி பயிற்சிக்காக அதிகாலையிலேயே பிரியங்கா எங்களை எழுப்பிவிடுகிறார். காலை 7.30 மணிக்கு தொடங்கி, மாலை வரை சரிவர பிரேக் கூட தராமல் பயிற்சி செய்ய சொல்கிறார். ஷூட்டிங்கின்போது அவருடன் மோதலே வந்துவிட்டது. பயிற்சி என்ற பெயரில் சித்ரவதை செய்து சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார். எங்கள் எனர்ஜியை வீணடிக்கும் விதமாக வேலை வாங்குகிறார். அதை செய், இதை செய் என கொடுமைப்படுத்துகிறார். அவரை போல கொடுமைக்கார பெண்ணை பார்த்தே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இது பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் முறையிடப்போவதாகவும் கூறினர். பலரும் புகார் கூறியுள்ளதால் தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் பிரியங்கா பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors