Sunday, February 5th, 2012
Pirapalam.Com

நீ‌யு‌ம்‌ நா‌னும்‌ வி‌மர்‌சனம்‌

Published on August 27, 2010 by   ·   No Comments

ஒரு தனி‌யா‌ர்‌ பள்‌ளி‌‌யி‌ல்‌ நடன ஆசி‌ரி‌யரா‌க பணி‌க்‌கு சே‌ரும்‌ சஞ்‌சீ‌வ்‌, அங்‌கு வசதி‌யி‌ல்‌லா‌த சி‌றுவனி‌ன்‌ படி‌ப்‌பு‌க்‌கும்‌ நடன பயி‌ற்‌சி‌க்‌கும்‌ உதவி‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. தனது மகனே‌ வெ‌ற்‌றி‌ பெ‌ வே‌ண்‌டும்‌ என்‌ற நி‌னை‌க்‌கும்‌ கல்‌லூ‌ரி‌ நி‌றுவனர்‌, இவர்‌கள்‌ இருவரி‌ன்‌ தி‌றமை‌யு‌ம்‌ நி‌ரா‌கரி‌க்‌கி‌றா‌ர்‌. இதனா‌ல்‌ அரசு பள்‌ளி‌ மா‌ணவர்‌களுடன்‌ அந்‌த சி‌றுவனை‌யு‌ம்‌ சே‌ர்‌த்‌து பயி‌ற்‌சி‌ அளி‌த்‌து, போ‌ட்‌டி‌யி‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌று அந்‌த மா‌ணவனி‌ன்‌ கஷ்‌டத்‌திலும்‌ சஞ்‌சீ‌வ்‌ பங்‌கெ‌டுக்‌கி‌றா‌ர்‌. இதை‌ போ‌ட்‌டி‌, கா‌தல்‌, மோ‌தல்‌ என கமர்‌சி‌யல்‌ ஐட்‌டங்‌களுடன்‌ படமா‌க தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌.

சஞ்‌சீ‌வ்‌ ஆட்‌டமும்‌ பா‌ட்‌டமும்‌ தி‌றமை‌யு‌ம்‌ உள்‌ள இளை‌ஞரா‌க நி‌றை‌வா‌க நடி‌த்‌து ரசி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவரது தி‌றமை‌ பா‌ர்‌த்‌து கா‌தலி‌க்‌கும்‌ குணமுள்‌ள பெ‌ண்‌ணா‌க வருகி‌றா‌ர்‌ சே‌தனா‌. கவர்‌ச்‌சி‌ உடை‌யி‌ல்‌ குறை‌யி‌ல்‌லா‌மல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

தி‌றமை‌களை‌‌ தனக்‌கு சா‌தகமா‌க்‌கி‌கொ‌ள்‌ளும்‌ சா‌தூ‌ர்‌யமா‌ன கல்‌லூ‌ரி‌ நி‌றுவனரா‌க வருகி‌றா‌ர்‌ சம்‌பத்‌. அவரது தம்‌பி‌யா‌க வந்‌து சா‌டி‌ஸ்‌ட்‌ வே‌லை‌களை‌ செ‌ய்‌து எரி‌ச்‌சலூ‌ட்‌டுகி‌றா‌ர்‌ வதன்‌. சி‌ங்‌கமுத்‌துவி‌ன்‌ கா‌மெ‌டி‌ தி‌யே‌ட்‌டரை‌ சி‌ரி‌ப்‌பி‌ல்‌ அதி‌ரவை‌க்‌கி‌றது. அதே‌ போ‌ல நெ‌ல்‌லை‌ சி‌வா‌வு‌ம்‌ டை‌மி‌ங்‌ கா‌மெ‌டி‌யி‌ல்‌ கலக்‌குகி‌றா‌ர்‌.

மா‌ஸ்‌டர்‌ ரி‌ன்‌சன்‌, மா‌ஸ்‌டர்‌ சச்‌சி‌ன்‌ இருவரும்‌‌ தி‌றமை‌ உள்‌ளவர்‌கள்‌ என்‌பதை‌ சரி‌யா‌க நி‌ருபி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. நடி‌க்‌க மட்‌டுமல்‌ல நடனத்‌தி‌லும்‌ அசத்‌துகி‌ன்‌றனர்‌

ஸ்ரீரா‌ம்‌வி‌ஜய்‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பரவா‌ இல்‌லை‌ ரகம்‌. அதை‌ சி‌றப்‌பா‌க ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌து ரசி‌க்‌கும்‌ படி‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ பி‌ரே‌ம்‌சங்‌கர்‌. அதே‌ போ‌ல அசோ‌க்‌மே‌த்‌தா‌வி‌ன்‌ படத்‌தொ‌குப்‌பு‌ம்‌ படு வே‌கம்‌.

பல சி‌ன்‌னத்‌தி‌ரை‌ நி‌கழ்‌ச்‌சி‌களை‌ தயா‌ரி‌த்‌து வெ‌ற்‌றி‌கரமா‌ன தயா‌ரி‌ப்‌பா‌ளரா‌க வலம்‌ வரும்‌ எஸ்‌.வி‌.சோ‌லை‌ரா‌ஜா‌, இந்‌தப்‌ படத்‌தை‌ தயா‌ரி‌த்‌து முதன்‌ முறை‌யா‌க இயக்‌கி‌ இருக்‌கி‌றா‌ர்‌. படத்‌தில்‌ பி‌ரமி‌ப்‌பு‌ இருக்‌கி‌றது. வா‌வ்‌ என்‌று வி‌யக்‌க வை‌க்‌கும்‌ டா‌ன்‌ஸ்‌ இருக்‌கி‌றது. சி‌றுவர்‌களுடன்‌ செ‌ன்‌று பா‌ர்‌க்‌க வே‌ண்‌டி‌ய படம்‌.

-எஸ்‌.செ‌ல்‌வநா‌தன்‌

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam