Sunday, February 5th, 2012

9 வயசிலேயே பார்த்து விட்டேன்-ஹன்சிகா!

Published on August 30, 2010 by   ·   No Comments

நான் திடீரென சினிமா வுக்கு வரவில்லை. 9 வயதிலேயே கேமராவைப் பார்த்து விட்டேன். இப்போது எனக்கு 19 வயதாகிறது. சினிமா குறித்து எனக்கு எல்லாம் தெரியும். நடிக்கவும் தெரியும், கிளாமராக கலக்கவும் தெரியும் என்று படு வேகமாக பேசுகிறார் வேலாயுதம் பட நாயகி ஹன்சிகா.

தனது பெயர் வெறும் ஹன்சிகாதான் என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார் ஹன்சிகா(-எனவே மோத்வானி ‘கட்’).

இவருடைய அம்மா மும்பையில் டாக்டராம். குட்டிப் பாப்பாவாக ஹன்சிகா இருந்தபோது அம்மாவுடைய கிளினிக்குக்குப் போவாராம். அங்கு வேலை பார்க்கும் நர்ஸ் உள்ளிட்டோரை அப்போதே மிமிக்ரி செய்து கலாய்ப்பாராம். இதைப் பார்த்து கிளினிக்குக்கு வந்த ஒருவர் வியந்து, போய் விளம்பரப் படத்தில் நடிக்க வைத்தாராம். அன்று முதல் அவருடன் நடிப்பு ஒட்டிக் கொண்டு விட்டதாம்.

ஹன்சிகாவுக்கு சிறு வயது முதலே சிரிப்புதான் பெரிய பிளஸ் பாயின்ட்டாம். நீ சிரிச்சுகிட்டே இருந்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம் என பலரும் கூறுவார்களாம். பெருமையுடன் சொல்கிறார் ஹன்ஸ்.

இதுகுறித்து கூறிய ஹன்சிகா, எனக்கு சினிமா என்றால் என்ன என்று நன்றாகவே தெரியும். அதிலும் தமிழ் சினிமா வில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். கிராமத்து வேடங்களிலும் கலக்குவேன்.

கவர்ச்சியாக மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காதீர்கள். எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் சரி பின்னிடுவேன்.

எனக்கு வேகம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் இப்போது விஜய், தனுஷ், ஜெயம் ரவி என அடுத்தடுத்து இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கி வருவது பெரும் குஷியாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த வேகம்தான் எனக்கும் பிடிக்கிறது. ஒரு படம் வரட்டும், நான் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் (குறிப்பாக தமிழ் சினிமா நாயகிகள்) புரிந்து கொள்வார்கள் என்று சவால் விடுவதைப் போல பேசுகிறார் ஹன்சிகா.

ஹன்சிகா என்று வைத்ததற்குப் பேசாமல் ‘ஹார்ஸ்’சிகா என்று மாற்றி வைத்திருக்கலாம் பெயரை, ரொம்ப வேகம்ப்பா…!

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors