Sunday, February 5th, 2012

நடிப்பு என் ரத்தத்தில் இருக்கிறது – கரீனா கபூர்

Published on August 30, 2010 by   ·   No Comments

நடிப்பு என் ரத்தத்தில் இருக்கிறது. அதை முழுமையாக அனுபவிக்கிறேன் என்றார் கரீனா கபூர். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் அது என் ரத்தத்தில் இருக்கிறது. நடிப்பை முழுமையாக அனுபவிக்கிறேன். ஏதோ பாடினோம், ஆடினோம் என்று செல்ல விரும்பவில்லை. சவாலான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனது முதல் படமான ‘ரெபியூஜி’யை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. அது ஸ்பெஷலான படம். அதுமட்டுமல்லாமல், சாமெலி, ஓம்காரா, ஜப் வி மெட், 3 இடியட்ஸ், குர்பான் போன்ற படங்களில் என் கேரக்டர்கள் வித்தியாசமாக அமைந்தது. இது மாதிரியான வித்தியாசமான கேரக்டர்களில் வேறு எந்த நடிகைகளும் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். என் சினிமா பயணம் வண்ணமயமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது கஜோலுடன் ‘வி ஆர் ஃபேமிலி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். கஜோலுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இருவருக்குமே சமமான கேரக்டர்கள்தான் என்றாலும்மென் கேரக்டர் சிக்கலானது. ‘ஸ்டெப்மம்‘ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் இது என்றாலும் இந்திய தன்மைக்கு கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. இதில் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த கேரக்டரில் நான் நடித்துள்ளேன். இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam