Sunday, February 5th, 2012

ஸ்ரேயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்!

Published on August 30, 2010 by   ·   No Comments

நிஜத்தில் திருமணக் கோலத்தில் மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஸ்ரேயாவின் பெற்றோருக்கு அதிகரித்துவிட்டதாம்.விளைவு, மிகத் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். ஓரளவு படங்களில் நடித்து கொஞ்சம் சீனியராகிவிட்ட நடிகை கள் திருமணம் செய்து கொள்ளும் சீஸன் இது.

மீனா, ரம்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். நவ்யாயும் திருமணமாகி கர்ப்பமாக உள்ளார். மலையாள நடிகை கார்த்திகா, காவ்யா போன்றவர்கள் திருமணமான சில வாரங்களிலேயே கணவனைப் பிரிந்து விட்டனர்.

அடுத்து நயன்தாரா- பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது ஸ்ரேயாவும் திருமணத்துக்கு தயாராகிறார். பெற்றோர் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளைப் பார்த்து வருகிறார்களாம்.

தமிழில் தற்போது சிக்கு புக்கு, ரவுத்திரம் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. கோமகதமாரு என்ற இந்திப் படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறார்.

தனது திருமணம் குறித்து ஸ்ரேயா கூறுகையில், “திருமணத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு பொருத்தமானவரை நான் சந்திக்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அந்த பொருத்தமானவரைத் தேடும் பணியில் எனது பெற்றோர் தீவிரமாக உள்ளது உண்மைதான். ஆனால் எனக்குப் பொருத்தமான மணமகன் வரும் வரை அவசரப்பட மாட்டேன்”,என்றார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam