Sunday, February 5th, 2012

ஹாலிவுட்டில் நுழைகிறார் நடிகை மல்லிகா ஷெராவத்

Published on September 1, 2010 by   ·   No Comments

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், விரைவில் ஹாலிவுட் முன்னணி நடிகை ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடன் நடித்ததில் இருந்து மல்லிகா ஷெராவத், வெளிநாடுகளில் பிரபலமானார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றதன் மூலம் ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களுடன் நெருங்கினார். ட்விட்டர் சமூக இணைய தள உறுப்பினராகி, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

தனது படத்துடன் ஹாலிவுட் நடிகை சல்மா ஹெய்க் படத்தை இணைத்து ட்விட்டரில் வெளியிட்டார் மல்லிகா. அதன்மூலம், சல்மாவுடன் நண்பராக பழகி வருவதாக ஹாலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வந்தார். எனினும், மல்லிகாவை ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால், பேசியதில்லை என்று குட்டை உடைத்து விட்டார் சல்மா ஹெய்க். இப்போது ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ட்விட்டரில் மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். ஷெரோனுடன் தான் இணைந்துள்ள படத்தையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றி மும்பையில் ஆங்கில சினிமா இதழ் வெளியிட்ட செய்தியில், ‘மல்லிகாவை பற்றி ஷரோன் விசாரிப்பதுண்டு. ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசி, நண்பர்களாகி விட்டனர். இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors