
மதராசப்பட்டினத்தில் ஹீரோயினாக நடித்த இங்கிலீஷ் பியூட்டி எமி ஜாக்சன் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். எமி-சூர்யா ஜோடி நடிக்கும் இப்படத்தை இயக்க போவது யார் தெரியுமா… நம்ம கவுதம் மேனன். ஆனால் படத்தை பற்றி எந்த ஒரு முழு தகவலும் கிடைக்கவில்லை.
கௌதம் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். பாடல்கள், பின்னணி இசை எதுவுமற்ற இப்படம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெரிகிறது. இந்த பிஸி ஷெட்யூல்களின் நடுவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்கி வருகிறார் கௌதம். இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது.