Sunday, February 5th, 2012
Pirapalam.Com

மீண்டும் “சட்டம் ஒரு இருட்டறை”

Published on September 2, 2010 by   ·   No Comments

தனக்கும் விஜயகாந்துக்கும் வாழ்வளித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றது. நாயகனாக நடித்த விஜயகாந்துக்கு பெரிய திருப்புமுனை அமைத்துத் தந்த படம் இது. எஸ் ஏ சந்திரசேகர், புரட்சி இயக்குநர் என தன் பெயருக்குப் பின் அடைமொழி போட்டுக் கொள்ள காரணமாக அமைந்ததும் இந்தப் படமே. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தி என வேறு மொழிகளில் ரீமேக் செய்தனர். அத்தனை மொழிகளிலும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் ரஜினி, அமிதாப் நடிக்க அந்தாகானூன் என்ற பெயரில் வெளியானது இந்தப் படம்தான். இப்போது இந்தப் படத்தை மீண்டும் தமிழில் எடுக்கிறார் சந்திரசேகர். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் படத்தை மீண்டும் எடுக்கிறேன் என்று தெரிந்து பல முன்னணி நடிகர்கள் தங்களை வைத்து இயக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் இன்னும் ஹீரோ யார் என்று முடிவு செய்யவில்லை. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்து இந்தப்படத்தை உருவாக்கப் போகிறேன்….” என்றார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors