இலியானா வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனது
Published on September 3, 2010 by பிரபலம்.கொம் · No Comments

பவன் கல்யாண் நடிக்கும் புது தெலுங்கு பட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்தியில் வெளியான ‘லவ் ஆஜ் கல்’ படத்தின் ரீமேக் இப்படம். இதில் தீபிகா படுகோனே வேடத்தில் நடிக்க இலியானா ஒப்பந்தமானார். திடீரென அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். காரணம் கேட்டபோது, கால்ஷீட் பிரச்னை அதனால் விலகிவிட்டேன் என கூறியிருக்கிறார்.
அந்த வாய்ப்பை பிடிக்க பல நடிகைகளிடம் போட்டி நிலவியது. இப்போது அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றிருக்கிறது. இலியானா இல்லையென தெரிந்ததும் த்ரிஷாவிடம் தயாரிப்பு தரப்பில் பேசியிருக்கிறார்கள். அவர் நடிப்பது உறுதி என கூறப்படுகிறது.