
விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரா… ரா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில், புவன சந்திரா எழுதி பென்னி கிருஷ்ணகுமார், திப்பு பாடிய பாடல் வரிகள் ராரா சரசுக்கு ‘ரா ரா…’ இந்தப் புகழ் பெற்ற பாடல் வரியின் முதல் வரிகளை இந்த படத்திற்கு பெயராக சூட்டியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தை ‘மதராசபட்டினம்’ படத்தை இயக்கிய விஜய் இயக்குகிறார். மோகன் நடராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரமுக்கு இரண்டு ஜோடிகள். அவர்கள் தேர்வு நடந்து வருகிறது. நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
