Sunday, February 5th, 2012

சி‌ந்‌துசமவெ‌ளி‌ வி‌மர்‌சனம்‌

Published on September 6, 2010 by   ·   No Comments

மருமகளும்‌ – மா‌மனா‌ரும்‌, கணவன்‌, மனை‌வி‌யா‌க குடும்‌பம்‌ நடத்‌தும்‌ கதை‌தா‌ன்‌, இந்‌த சி‌ந்‌து சமவெ‌ளி‌. மி‌ருகம்‌, உயி‌ர்‌ போ‌ன்‌ற படங்‌களை‌ இயக்‌கி‌ய இயக்‌குநர்‌ சா‌மி‌யி‌ன்‌ படம்‌தா‌ன்‌ இது.

மகன்‌, மனைவி‌யை‌ வி‌ட்‌டு பி‌ரி‌ந்‌து பல வருடங்‌கள்‌ ரா‌ணுவத்‌தி‌ல்‌ பணி‌பு‌ரி‌ந்‌து வி‌ட்‌டு ஊருக்‌கு தி‌ரும்‌பு‌கி‌றா‌ர்‌ இரா‌ணுவ அதி‌கா‌ரி‌ கஜி‌னி‌ (வீ‌ராச்‌சா‌மி‌). அவருடை‌ய மகன்‌, மனை‌வி‌யு‌டன்‌ சந்‌தோ‌ஷமா‌க வா‌ழ்‌ந்‌து வருகி‌றா‌ர்‌. தி‌டீ‌ரெ‌ன்‌று ஒரு நா‌ள்‌ அவருடை‌ய மனை‌வி‌ பா‌ம்‌பு‌ கடி‌த்‌து இறந்‌து வி‌டுவதா‌ல்‌. தனக்‌கும்‌, தன்‌ மகனுக்‌கும்‌ சா‌ப்‌பா‌டு போ‌ன்‌ற அடி‌ப்‌படை‌ பி‌ரச்‌சி‌னை‌க்‌கா‌க. தன்‌ மகனுக்‌கு (ஹரீ‌ஸ்‌), அவன்‌ பள்‌ளி‌ கூடம்‌ படி‌க்‌கும்‌ போ‌து கா‌தலி‌த்‌த (அனகா‌) பெ‌ண்‌னை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌க்‌கி‌றா‌ர்‌. அவர்‌கள்‌ சந்‌தோ‌ஷமா‌க இருப்‌பதை‌ நி‌னை‌த்‌து சந்‌தோ‌ஷம்‌ அடை‌கி‌றா‌ர்‌.

சி‌றி‌து நா‌ள்‌ கழி‌த்‌து தன்‌னுடை‌ய மே‌ற்‌படி‌ப்‌பு‌க்‌கா‌க வீ‌ட்‌டை‌ வி‌ட்‌டு ஹா‌ஸ்‌டல்‌ செ‌ன்‌று படி‌க்‌கி‌றா‌ர்‌ ஹரீ‌ஸ்‌. இந்‌த நே‌ரத்‌தி‌ல்‌ தன்‌ மருமகள்‌ மீ‌து கா‌ம பா‌ர்‌வை‌ வீ‌சுகி‌றா‌ர்‌ கஜி‌னி‌. அந்‌த ஆசை‌க்‌கு, தன்‌ மருமகளை‌ கட்‌டா‌யமா‌க அடை‌ந்‌து வி‌டுகி‌றா‌ர்‌ கஜி‌னி‌. அதன்‌ பி‌றகு தன்‌ மா‌மா‌னா‌ரி‌டம்‌, தா‌னா‌கவே‌ தன்‌னுடை‌ய உடம்‌பை‌ ஒவ்‌வொ‌ருநா‌ளும்‌ பந்‌தி‌ வை‌க்‌கி‌றா‌ர்‌ அனகா‌. அவர்‌களுடை‌ய உறவு‌ கணவன்‌, மனை‌வி‌யா‌க தொ‌டர்‌கி‌றது‌.

ஹரீ‌ஸ்‌ வி‌டுமுறை‌யி‌ல் வீ‌ட்‌டுக்‌கு வருகி‌றா‌ர்‌. அப்‌போ‌து சூ‌ழ்‌நி‌லை‌களை‌ வை‌த்‌து, இவர்‌கள்‌ மீ‌து சந்‌தே‌கம்‌ வருகி‌றது ஹரீ‌ஸ்‌க்‌கு. அதற்‌கு அவர்‌ எடுக்‌கும்‌ நடவடி‌க்‌கை‌களை‌யு‌ம்‌ சமா‌ளி‌த்‌து. அவரை‌ கல்‌லூ‌ரி‌க்‌கு அனுப்‌பி‌ வி‌ட்‌டு, தங்‌களுடை‌ய லீ‌லை‌களை‌ தொ‌டர்‌கி‌ன்‌றனர்‌. மா‌மனா‌ரும்‌, மருமகளும்‌. அதன்‌ பி‌றகு ஹரீ‌ஸ்‌ பி‌ரபல வா‌ர இதழ்‌ ஒன்‌றி‌ல்‌ தன்‌ மனை‌வி‌ மே‌ல்‌ வை‌த்‌தி‌ருக்‌கும்‌ கா‌தலை‌ பற்‌றி‌. ஒரு கட்‌டுரை‌ எழுதுகி‌றா‌ர்‌. அதை‌ படி‌க்‌கும்‌ அனகா‌. தா‌ன்‌ செ‌ய்‌த தவறை உணர்‌ந்‌து, தா‌ன்‌ சோ‌டை‌ போ‌னதற்‌கா‌ன கா‌ரணங்‌களை‌யு‌ம்‌‌ வீ‌டி‌யோ‌வி‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌து வை‌த்‌துவி‌ட்‌டு தற்‌கொ‌லை‌ செ‌ய்‌து கொ‌ள்‌கி‌றா‌ர்‌. அதை‌ பா‌ர்‌க்கும்‌ ஹரீ‌ஸ்‌ எடுக்‌கும்‌ முடி‌வு‌ என்‌ன என்‌பது க்‌ளை‌மா‌க்‌ஸ்‌.

பி‌ள்‌ளை‌ இல்‌லா‌த வீ‌ட்‌டி‌ல்‌ கி‌ழவன்‌ துள்‌ளி‌ வி‌ளை‌யா‌ண்‌டா‌ன்‌னு ஒரு பழமொ‌ழி‌ இருக்‌கு. அதை‌ கொ‌ஞ்‌சம்‌ மா‌ற்‌றி‌ பி‌ள்‌ளை‌ இல்‌லா‌த போ‌து மருமகளி‌டம்‌ வி‌ளை‌யா‌ண்‌ட மா‌மனா‌ர்‌ என்‌று பு‌து மொ‌ழி‌யை‌ படை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ சா‌மி‌.

ஹரீ‌ஸ்‌ கல்‌யா‌ண்‌, அனகா‌, கஜி‌னி‌ என பு‌துமுகங்‌களி‌ன்‌ நடி‌ப்பு‌ தி‌றனை‌ அபா‌ரா‌ம்‌ என்‌று பா‌ரா‌ட்‌டலா‌ம்‌. அதே‌ நே‌ரத்‌தி‌ல்‌ இப்‌படி‌ ஒரு கதை‌யி‌ல்‌ நடி‌க்‌க ஒப்‌பு‌க்‌ கொ‌ண்‌ட இவர்‌களுடை‌ய நடி‌ப்‌பு‌ வி‌லலுக்‌கு இரை‌த்‌த நீ‌ர்‌தா‌ன்‌. சர்‌ச்‌ ஃபா‌தரா‌க கஞ்‌சா‌ கருப்‌பு‌. அவரும்‌ ஒரு சபலபு‌த்‌தி‌ உள்‌ள ஃபா‌தர்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌. கா‌ட்‌சி‌கள்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க இருந்‌தா‌லும்‌. அதை‌ ரசி‌க்‌க மனம்‌ ஒத்‌துக்‌கொ‌ள்‌ளவி‌ல்‌லை‌.

உத்‌பல்‌ வி‌. நயனா‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ கடலி‌ன்‌ அழகை‌யு‌ம்‌, இயற்‌கை‌யை‌யு‌ம்‌, பரந்‌து வி‌ரி‌ந்‌து பசுமை‌ வெ‌ளி‌களும்‌, இருள்‌ சூ‌ழ்‌ந்‌த இயற்‌கை‌யு‌ம்‌ அடி‌க்‌கடி‌ தி‌ரை‌யி‌ல்‌ கா‌ட்‌டப்‌பட்‌டா‌லும்‌, ஒவ்‌வொ‌ரு பி‌ரே‌மி‌லும்‌ வி‌த்‌தி‌யா‌சம்‌ கா‌ட்‌டி‌ ரசி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. சுந்‌தர்‌ .சி‌. பா‌பு‌ இசை‌யி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பரவா‌ இல்‌லை‌ ரகம்‌. சபே‌ஷ்‌ முரளி‌யி‌ன்‌‌ பி‌ன்‌னணி‌ இசை மி‌ரட்‌டல்‌.

நா‌டோ‌டி‌கள்‌ படத்‌தை‌ தயா‌ரி‌த்‌த குளோ‌பல்‌ இன்‌போ‌டெ‌யி‌ன்‌மெ‌ன்‌ட்‌ நி‌றுவனம்‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. படத்‌தை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து அப்‌படி‌ ஒரு படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தவர்‌கள்‌, ஏன்‌ இப்‌படி‌ ஒரு படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தா‌ர்‌கள்‌ என்‌று கே‌ட்‌கும்‌ அளவி‌ற்‌கு யோ‌சி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. யோ‌சி‌க்‌க வை‌த்‌த இயக்‌குநருக்‌கே‌ எல்‌லா‌ பெ‌ருமை‌களும்‌ சே‌ரும்‌. இயக்‌குநர்‌ எடுத்‌துக்‌கொ‌ண்‌ட கருவி‌ல்‌ பயணி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ரா‌, தி‌ரை‌க்‌கதை‌யை‌ எப்‌படி‌ நகர்‌த்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ என்‌பதி‌ல்‌ குழப்‌பம்‌ இல்‌லை‌. அவர்‌ நி‌னை‌த்‌த படி‌ இரண்‌டு மா‌த கர்‌பத்‌துடன்‌ இறந்‌து வி‌டுகி‌றா‌ர்‌ அனகா‌. படம்‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து, மா‌மனா‌ரும்‌ மருமகளும்‌ கணவன்‌ மனை‌வி‌ போ‌ல உட்‌கா‌ர்‌ந்‌து சா‌ப்‌பி‌டுவது, உடை‌ அணி‌ந்‌து பா‌ர்‌த்‌து ரசி‌ப்‌பது போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ மனம்‌ கூசி‌ப்‌போ‌கி‌றது. கலா‌ச்‌சா‌ரத்‌துக்‌கு எதி‌ரா‌ன படமா‌க இருப்‌பதா‌ல்‌ படம்‌ அண்‌ணி‌யப்‌படுகி‌றது.

ஆண்‌கள்‌ மட்‌டும்‌தா‌ன்‌ தவறு செ‌ய்‌ய து‌ண்‌டுவா‌ர்‌கள்‌ என்‌பதை‌ சொ‌ல்‌லும்‌ படங்‌களுக்‌கு நடுவே‌,பெ‌ண்‌ணும்‌ தை‌ரி‌யமா‌க தவறு செ‌ய்‌ய முடி‌வெ‌டுப்‌பா‌ல்‌ என்‌று ஆண்‌களுக்‌கு உள்‌ள உரி‌மை‌யை‌ போ‌ல நி‌யா‌யப்‌படுத்‌தி‌ தை‌ரி‌யமா‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌. எங்‌கோ‌, அங்‌கொ‌ன்‌று, இங்‌கொ‌ன்‌று நடக்‌கி‌ற இன்‌ப வெ‌றி‌யை‌ படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ ஒட்‌டுமொ‌த்‌த சமுதா‌யத்‌துக்‌கும்‌ எடுத்‌து கா‌ட்‌டுவது சரி‌யல்‌ல. கலா‌ச்‌சா‌ரம்‌ பண்‌பா‌டு பற்‌றி‌ கவலை‌யி‌ல்‌லா‌மல்‌ இருக்‌கும்‌ இதற்‌கு சா‌ன்‌றி‌தழ்‌ வழங்‌கி‌யி‌ருக்‌கும்‌ தணி‌க்‌கை‌ அதி‌கா‌ரி‌களை‌ வன்‌மை‌யா‌க கண்‌டி‌க்‌கி‌றோ‌ம்‌.

சி‌ந்‌து சமவெ‌ளி‌ -கள்‌ள கா‌தல்‌

-எஸ்‌.செ‌ல்‌வநா‌தன்‌

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors