Sunday, February 5th, 2012
Pirapalam.Com

ஸ்ரேயா மோகத்தில் சல்மான் ருஷ்டி

Published on September 7, 2010 by   ·   No Comments

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ நாவலை தழுவி படம் இயக்குகிறார் தீபா மேத்தா. இந்தியா&பாகிஸ்தான் பிரிவினை பற்றிய கதையிது. இதில் நடிக்க ஏற்கெனவே ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ், சோஹா அலி கான், கங்கனா ரனவத், இம்ரான் கான் என நட்சத்திர பட்டாளம் ரெடியாகிவிட்டது. இதற்கிடையே படத்தில் கவர்ச்சிகரமான ஒரு ரோலுக்கு ஹீரோயின் தேடி வந்தார்கள். அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றுள்ளது. ஸ்ரேயா தேர்வானதில் சல்மான் ருஷ்டியின் பங்கு அதிகமாம்.

‘மிட்நைட்ஸ் சில்ரன்’ படத்தின் கதையை படமாக்க தீபா முடிவு செய்ததும் சல்மான் ருஷ்டியிடம் பேசினார். ‘ஓகே… ஸ்டோரி ரைட்ஸ் தருகிறேன்’ என சொல்லிவிட்டு ருஷ்டி ஒதுங்கிக் கொள்ளவில்லை. ‘இந்த கதை கொஞ்சமும் மாறாமல் படமாக்கணும். கொஞ்சம் மாறினாலும் கதையின் போக்கு மாறிவிடும். திரைக்கதையில் என்னுடைய பங்கு இருக்கணும்’ என தீபாவிடம் ருஷ்டி சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து கதை விவாத்தில் தீபாவுடன் சேர்ந்து பணியாற்றுகிறார் ருஷ்டி. கூடவே பட ஹீரோயின்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Ôசமீப காலமா ஸ்ரேயாவின் படங்களை பார்க்கிறேன். அவர் நல்ல அழகு. அவரோட ஸ்டைலும் சூப்பர். அவரையே நம்ம படத்துக்கு தேர்வு பண்ணலாமேÕ என தீபாவிடம் சொல்லியிருக்கிறார் ருஷ்டி. ஏற்கெனவே தனது தயாரிப்பில் ‘வாட்ஸ் குக்கிங்’ படத்தில் நடித்ததால் ஸ்ரேயாவின் திறமை மீது தீபாவுக்கும் நம்பிக்கை. அதனால் அந்த வேடம் இப்போது ஸ்ரேயாவுக்கு சென்றுவிட்டது. ‘சமீபத்தில் சோஹா அலி கான் உட்பட சில நடிகைகளை சந்தித்து இப்பட கதை பற்றி ருஷ்டி பேசினார். ஸ்ரேயாவை இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் அவர்களின் சந்திப்பு நடக்கும்’ என இப்பட வட்டாரங்கள் கூறுகின்றன.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors