Sunday, February 5th, 2012
Pirapalam.Com

சிந்து சமவெளி நாயகி அனகாவுக்கும் கொலை மிரட்டல்

Published on September 8, 2010 by   ·   No Comments

டைரக்டர் சாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் நாயகியாக நடிகை அனகா நடித்திருக்கிறார். அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமான இவர், இந்த படத்தில் தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டார். சிந்துசமவெளியில் மாமனாருடன் மருமகள் சல்லாபம் செய்யும் காட்சிகள் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டைரக்டர் சாமிக்கு ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், படத்தில் மருமகளாக நடித்த அனகாவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி படத்தில் அனகா அளித்துள்ள பேட்டியில், சிந்து சமவெளி படத்தின் கதை ஒரு கருத்தை போதிக்கிற கதை. மாமனார் -மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போல் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற தப்பான உறவுக்கு இதுதான் தண்டனை என்ற கருத்து படத்தின் முடிவில் சொல்லப்பட்டு இருக்கிறது. நல்ல கருத்துடைய படம் என்பதால்தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றிருந்தேன். அப்போது சில பெண்கள் என்னை திட்டினார்கள். கடந்த 2 நாட்களாக, போனில் மிரட்டல்கள் வருகின்றன. மாமனார் -மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நீ எப்படி நடிக்கலாம். தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்துகிற உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். நான் ஒரு நடிகை. டைரக்டர் எப்படி நடிக்க சொல்கிறாரோ, அப்படி நடிக்கிறேன். இது, எப்படி கலாசார குற்றம் ஆகும்?, என்று கூறியுள்ளார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam