Sunday, February 5th, 2012
Pirapalam.Com

இரண்டு முகம் விமர்சனம்

Published on September 10, 2010 by   ·   No Comments

கரணுக்கு அரசியலில் நுழைந்து மந்திரியாக வேண்டும் என்று ஆசை. அதற்கான காய் நகர்த்தலில் மளமளவென்று உயர்ந்து மந்திரியாகவும் ஆகிவிடுகிறார். அவருக்கு செயலாளராக வருகிறார் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்யராஜ். கோடி கோடியாக சம்பாதிக்க துடிக்கும் கரணை நல்வழிப்படுத்தி அவரை நல்ல அரசியல் வாதியாக்க சத்யராஜ் நடத்தும் நாடகமும் அதிரடி திருப்பங்களும் திரைக்கதை.
அனல் பறக்கும் வசனங்களில் சத்யராஜ் வழக்கமான சவால்ராஜ். கரணை திருத்த அவர் போடும் சின்ன நாடகத்தில் சினிமாத்தனம் இருந்தாலும் சுவாரஸ்யம். கிளைமாக்சில் அது வெடிக்கும்போது கலகலப்புடன் கலைகிறது ஆடியன்ஸ் கூட்டம். சத்யராஜின் பிளாஷ்&பேக்கில் வரும் பால்பவுடர் சமாச்சாரத்தை ஏற்கெனவே வால்டர் வடிவேல் படத்தில் பார்த்துவிட்டதால் மனதில் ஒட்டவில்லை.
அரசியல்வாதியாக துடிக்கும் வெள்ளை வேட்டி சட்டை இளைஞனாக கரண். தலைவர்கள் குரலை மிமிக்ரி செய்வதில் தொடங்கி, கார் கதவை திறந்து விட்டு, காலில் விழுந்து, கண்ணீர்வடித்து அவர் அரசியலில் முன்னுக்கு வரும் காட்சிகள் கச்சிதம். ஆனால் மந்திரி பதவியேற்ற முதல் நாளே பொது இடத்தில் பலகோடி லஞ்சம் வாங்குவதெல்லாம் ஓவர். சமையல்காரரின் மகன் கரண், எதிர்கட்சி முன்னாள் மந்திரியின் மகள் சுகானியை காதலிப்பதும், டூயட் பாடுவதும் அவர்களின் சின்ன வயது கல்யாணமும் நாடகத்தனம்.
எதிர்கட்சி, ஆளுங்கட்சி, ஆதரவு, எதிர்ப்பு, திடீர் ஆதரவு, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பெரிது பெரியதாக யோசித்த இயக்குனர், அதை படமாக்கியதில் ஏகப்பட்ட குழப்பம். எம்.எஸ்.பாஸ்கரின் பசு பாசம் சிரிக்க வைக்கிறது. கஞ்சா கருப்பு அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். பரத்வாஜின் இசையில் மெலடி தாலாட்டுகிறது. அப்துல் கலாமின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors