Sunday, February 5th, 2012
Pirapalam.Com

திருமணத்துக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை பத்மப்பிரியா

Published on May 17, 2010 by   ·   No Comments

மலையாளத்தில் சர்ச்சையான வேடங்களில் நடிக்கிறீர்களே?

என்னை நம்பி இயக்குனர்கள் சில சிக்கலான கேரக்டர்களை கொடுக்கிறார்கள். அவற்றை முடிந்தவரை சிறப்பாக செய்து கொடுக்கிறேன். அந்த கேரக்டர் வெற்றி பெறும்போது சிலரோடு என்னை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். பிரச்னையான கேரக்டர்களை தேடிச் செல்வதில்லை. தேடி வருவதை மறுப்பதுமில்லை. இப்போதுகூட மலையாளத்தில் ஒரு படத்தில் தாசி கேரக்டரில் நடிக்கிறேன். பழங்கால தாசி வாசுவதத்தாவை பின்பற்றி வாழும் ஒரு பெண்ணின் கதை.

இந்தி சினிமா எப்படி இருக்கிறது?

‘ஸ்ட்ரைக்கர்’ என்ற படத்தில் நடித்தேன். ஒரு நடிகையாக எனக்கு அப்படம் புகழை தந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்திருக்கிறது. ‘கஜினி’ அளவுக்கு வியாபார படம் இல்லை. அப்படி ஒரு படத்தின் மூலம்தான் இந்திக்கு போக வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. அடுத்த படம் கமர்ஷியல் படமாக இருக்கும். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.

உங்களோடு நடிக்க வந்தவர்கள் திருமதியாக மாறி வருகிறார்கள். நீங்கள் எப்போது?

நான் சினிமாவுக்கு வந்து மூன்று வருடங்கள்தான் ஆகிறது. உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்வேன். அதன் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் நடிப்புக்கு தடையாக இருக்காது. தொடர்ந்து நடிக்க அனுமதிப்பவருடன்தான் திருமணம் நடக்கும். திருமணம், வாழ்க்கை. நடிப்பு, தொழில். இந்த பாலிசியில் தெளிவாக இருக்கிறேன்.

இப்போதெல்லாம் விழாக்களுக்கு கவர்ச்சியாக வந்து பரபரப்பு ஏற்படுத்துகிறார் பத்மப்பிரியா. ‘தமிழில் குடும்ப பாங்கான வேடங்களாக அமைந்து விட்டது. அதனால¢ நான் கவர்ச்சி உடை அணிந்தால் ‘ஏன் இந்த மாற்றம்’ என்கிறார்கள். நானும் கமர்ஷியல் ஹீரோயின்தான். மலையாளத்தில் கூட கமர்ஷியல் ஹீரோயினாக நிறைய படம் நடித்திருக்கிறேன். முகம் சுளிக்க வைக்கும் விதமான கிளாமரில் நடிக்க மாட்டேன். இது மட்டும்தான் நிபந்தனை. மற்றபடி ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட் பாட ரெடிதான்’ என்கிறார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm