இலங்கை ஐஃபா விழாவில் பங்கேற்கப் போவதில்லை : மம்முட்டி!
Published on May 31, 2010 by பிரபலம்.கொம் · No Comments

இலங்கையில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மம்முட்டியிடம் கருத்து கேட்டபோது, இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
ஆனால் இது தமிழரின் உணர்வுகளுக்கு எதிரானதாக ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருந்தது. எனவே இந்த விழாவுக்குப் போவதில்லை என முடிவெடுத்து அறிவித்துள்ளேன். தமிழர்கள் எனக்கு முக்கியம். சென்னை எனக்கும் சொந்த நகரம்தான். தமிழர்களோடு இரண்டறக் கலந்த நான் அவர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வில் பங்கேற்பேன் என எதிர்ப்பார்ப்பது தவறு என்றார்.