ரீமேக் அசின்
Published on May 16, 2010 by பிரபலம்.கொம் · No Comments
‘கஜினி’ ரீமேக்கில் இந்தியில் அறிமுகம் ஆனார் அசின். இதையடுத்து இப்போது அவர் ரீமேக் படங்களில் நடிப்பது தொடர்கிறது. மலையாள ‘பாடிகார்ட்’ பட ரீமேக்கில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இப்படத்தை சித்திக் இயக்குகிறார். இதையடுத்து ‘காக்க காக்க’ ரீமேக் இந்தியில் தயாராகிறது. இதில் ஜான் ஆப¢ரஹாமுடன் நடிக்கிறார். ‘எவனோ ஒருவன்’ படத்தை இயக்கிய மராட்டி இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்.
தெலுங்கு ‘கிக்’ பட ரீமேக்கை இந்தியில் அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். இதில் சல்மானுக்கு ஜோடியாகிறார் அசின்.