Sunday, February 5th, 2012

மீண்டும் என் அலை அடிக்கும் : ஸ்ரேயா!

Published on June 8, 2010 by   ·   No Comments

இடையில் சில படங்கள் ஓடவில்லை. அதனால் எனது மார்க்கெட் சரியவில்லை. இப்போதும் தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளேன். ‘சிக்கு புக்கு’ படத்துக்கு பின் மீண்டும் என் அலை அடிக்கும்’’ என்கிறார் ஸ்ரேயா.

‘சிக்கு புக்கு’ படம் பற்றி?

இது முழு நீள ரொமான்டிக் படம். முழுக்க முழுக்க என்னையும் ஆர்யாவையும் சுற்றிதான் கதை நகரும். இதில் துள்ளலான ஸ்ரேயாவை ரசிகர்கள் பார்க்கலாம். இந்த கேரக்டரை நானே விரும்பி நடிக்கிறேன். ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

இதில் இன்னொரு ஹீரோயின் பிரீத்தியும் இருக்கிறாரே?

இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை அவர். படத்தில் அவர் ஹீரோயின் கிடையாது. கவுரவ வேடத்தில்தான் நடிக்கிறார். அதனால் யாருக்கு முக்கியத்துவம் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை.

‘ரவுத்திரம்’ படத்தில் நடிக்கிறீர்களா?

அப்படம் பற்றி சில தகவல்கள் வந்தன. நானும் கேள்விப்பட்டேன். அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நான் நடிப்பது உறுதி. முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அதில் பங்கேற்கவில்லை. அடுத்த ஷெட்யூல், ஜூலையில் நடக்கிறது. அதில் பங்கேற்பேன்.

‘வாட்ஸ் குக்கிங்’ ஆங்கில படம் என்ன ஆனது?

அந்த படம் திரைப்பட விழாக்களுக்காக தயாரானது. பல பட விழாக்களில் கலந்துகொண்டது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிப்பது எனது கனவு. அதில், முதல் கட்டமாக அவரது தயாரிப்பில் இந்த படத்தில் நடித்தேன். விரைவில் அவரது இயக்கத்திலும் நடிப்பேன் என நம்புகிறேன்.

அடுத்து?

தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக ‘டான் சீனு’ படத்தில் நடிக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ள ‘புலி’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். ஏ.ஆர். ரகுமான் இசை என்பதாலும் படத்தில் மிக முக்கியமான பாடல் காட்சி என்பதாலும் டான்ஸ் ஆடினேன்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm