Sunday, May 20th, 2012

காதலனை மறைத்த ப்ரியங்கா! – கரீனா தாக்கு

Published on March 23, 2011 by   ·   No Comments

வருமான வரி அதிகாரிகள் வந்துவிட்டதால் பயந்து போன ப்ரியங்கா சோப்ரா, காதலன் ஷாகித் கபூரை மறைத்து வைத்திருந்தார், என்று கூறி பரபரப்பேற்படுத்தியுள்ளார்.

கரீனா கபூரும், ப்ரியங்கா சோப்ராவும் எலியும் பூனையுமாக அடித்துக் கொள்கிறார்கள் பாலிவுட்டில். காரணம், காதல் விவகாரம்தான்.

ப்ரியங்காவின் இப்போதைய காதலர் ஷாகித் கபூர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கரீனாவின் காதல் பிடியில் இருந்து வந்தார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். புதிதாக சாயிப் அலிகானுடன் கரீனாவுக்கு காதல் மலர்ந்துவிட்டது.

கரீனாவைப் பிரிந்த ஷாகித் கபூரோ பிரியங்கா சோப்ராவை காதலியாக்கிக் கொண்டார். சமீபத்தில் பிரியங்கா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய போது ஷாகித் கபூர் வீட்டில் இருந்தாராம். அதிகாரிகளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து ஆரம்பத்தில் மறைத்து வைத்திருந்தாராம் ப்ரியங்கா. குறிப்பிடத்தக்கது.

இதை இப்போது கரீனா கபூர் விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், “காதலனை வீட்டில் அடைத்து வைப்பது ஒரு அநாகரீகமான செயல். இது மாதிரியெல்லாம் செய்ய எனக்குத் தெரியாது. நான் எதிலும் நேர்மையாகத்தான் நடந்து கொள்வேன்,” என்றார்.

இதைக் கேட்டுவிட்டு சும்மா இருப்பாரா ப்ரியங்கா சோப்ரா…

அவரும் தனது பதிலைத் தந்துள்ளார் இப்படி: “அப்படியெல்லாம் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. வருமான வரித்துறையினர் வந்தபோது, ஷாகித் கபூரை துணைக்கு அழைத்தேன். அவரும் வந்தார். இதில் மறைக்க என்ன இருக்கிறது… அல்லது என்னதான் சொல்ல வருகிறார் கரீனா… அவரைப் போல நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கத் தெரியாது,” என்றார்.

கடந்த டிசம்பர் மாதம்தான் கரீனாவும் ப்ரியங்காவும் ஒரு சமாதான உடன்பாடு செய்து கொண்டிருந்தனர். இது பொது இடங்களில், பத்திரிகைகளில் ஒருவரையொருவர் தாக்கி பேட்டி தருவதில்லை என்று ஒப்புக் கொண்டிருந்தனர். இப்போது மீண்டும் இருவருக்குமிடையே ஈகோ யுத்தம் தொடங்கியுள்ளது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors