Sunday, May 20th, 2012
Pirapalam.Com

‘வேட்டையில்’ பொலிஸ் ரோலில் மாதவன்!

Published on April 28, 2011 by   ·   No Comments

தயாரிப்பாளர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிகர் ஆர்யா உடன் மாதவன் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படத்தில் தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது என்பதை யாரிடமும் சொல்லாமல் இரகசியம் காத்து வந்தார் மாதவன்.

காரைக்குடியில் ‘வேட்டை’ படத்தின் படக்காட்சிகள் சமீபத்தில் நடந்திருக்கின்றது, அதிலிருந்து நமது மேடி மாதவன் ‘வேட்டையில் பொலிஸ் ரோலில் நடித்திருப்பதாக’ தகவல் வெளியானது.

படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது உண்மைதான், ஆனால் அந்த கதாபாத்திரத்தை பற்றி விரிவாக என்னால் தற்போது பேசமுடியாது. படம் வெளியானதும் ரசிகர்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.

காரைக்குடியில் நான், ஆர்யா, சமீரா மூன்று பேரும் நடித்த அனுபவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது. படத்தில் ஆர்யாவும் நானும் உடன்பிறவா சகோதர்கள் மாதிரி நடித்துள்ளோம்.

படத்தில் பணியாற்றிய கொமராமேன் முதல் தயரிப்பாளர் வரை நாங்க இளமை பட்டாளமாக கொண்டாடி களித்தோம். ரன் படத்துக்கு பிறகு நானும் லிங்குசாமியும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழில் ‘தனு வெட்ஸ் மனு’ படம் ரீமேக் பண்ண படுவதாக கூறுகிறார்கள். அதில் நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. அது ஒரு அற்புதமான உண்மை கதையை மையமாக கொண்ட படம்.

குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளார்கள். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இருக்கின்றது. தமிழில் இந்த படத்தின் கதாநாயகி பாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாக சொல்கிறார்கள்.

இந்த நான்கு வருடத்தில் இந்தியில் ஒரு படமும், தமிழில் ஒரு படமும் பண்ணலாம் என திட்டம் வைத்துள்ளேன் என்கிறார் மேடி மாதவன்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors