வனத்துறை அதிகாரியாக பொறுப்பு ஏற்கும் உதய்கிரண், சட்டவிரோதமாக மரங்களை கடத்தும் ராதாரவியை எச்சரிக்கிறார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் மீரா ஜாஸ்மின் மீது உதய்க்கு காதல் பிறக்கிறது. அவரை ஐ.பி.எஸ் படிக்க வைக்க உதவுகிறார். இதற்கிடையில் தனது நண்பன் ரிச்சர்ட்டுக்கு கல்லூரி மாணவி சுதர்சனாவை மணம் முடித்து வைக்கிறார். பெண் விடுதலைக்காக போராடுபவர்போல் நடிக்கும் ரிச்சர்ட், நிஜவாழ்வில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ராதாரவியுடன் சேர்ந்து சுதர்சனாவை கொலை செய்து, அந்த பழியை உதய்கிரண் மீது சுமத்துகிறார். போலீசில் சிக்கும் உதய்கிரண் ஜெயிலிலிருந்து தப்பிச் சென்று, தன் மீது விழுந்த பழியை பொய் என நிரூபிக்க ஆதாரம் திரட்டுகிறார். அவருக்கு மீரா ஜாஸ்மின் உதவுகிறார். இதற்கிடையில், நீதிபதியாக இருந்த உதய்யின் அம்மா ரோகிணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மகனுக்காக வக்கீலாகி வாதாடுகிறார். உதய் மீது விழுந்த கொலைப்பழி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பது கிளைமாக்ஸ்.
‘ஆண்கள், பெண்களை காப்பாற்றிய காலம்போய், பெண்கள், ஆண்களை காப்பாற்றும் காலம் இது’ என்பதுபோன்ற முதல்வரின் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. தொடக்க காட்சியில் ரயில் நிலையத்தில் போர்ட்டர்போல் பெட்டியை தூக்கி வரும் உதய்கிரண், ‘போலீஸ் தேடும் குற்றவாளி’ என்று குறிப்பிட்டு தனது படம் அச்சிடப்பட்டிருப்பதை பார்த்து அதிரும்போது நமக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. போலீஸ் தேடும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது பிளாஷ்பேக்.
விவேக் கார் ஓட்ட, அருகில் அமர்ந்திருக்கும் உதய்கிரண், ‘சென்னை அழகாகிவிட்டது’ என்று சொல்ல, ‘அழகாக்கி இருக்காங்கன்னு சொல்லுங்க’ என்று வார்த்தையை திருத்தும் விவேக், ‘பீச் ரோடு, மவுண்ட் ரோடு ஒரு ரவுண்டு போகலாம். அதுவும் அழகாக இருக்கும்’என்று சொன்னதும், ‘மவுண்ட்ரோடை அண்ணாசாலை என்றும், பீச் ரோட்டை, காமராஜர் சாலை என்றும் எப்போதோ பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், இன்னமும் மவுண்ட் ரோடு, பீச் ரோடு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே’ என்று உதய்கிரண் சூடு வைப்பது ருசி. ‘பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டணும்’ என்று மகள் கேட்டதும், ‘அதுக்குதாம்மா முயற்சி பண்ணிட்டிருக்கேன். இப்பவெல்லாம் வேர்வை வடிஞ்சா ரத்தம்தான் வருது’ என்று வறுமையின் கொடுமையை மாணிக்க விநாயகம் யதார்த்தமாக சித்தரிப்பது நறுக்.
ரிச்சர்ட், புதிய பரிமாணத்தில் என்ட்ரி கொடுக்கிறார். பாரதி, பாரதிதாசன் என்று வாய்ப்பேச்சு பேசும் அவரது செயல்கள் எல்லாமே பெண்களுக்கு எதிராக இருப்பதை தோலுரிக்கும்போது பொய் முகம் கிழிகிறது. சுதர்சனாவை காதல் வலையில் வீழ்த்தும் ரிச்சர்ட், திருமண பேச்சு முடிந்ததும், ‘எனக்கு கல்யாண பரிசாக 50 லட்சம் ரூபாய் தரணும்’ என்று வில்லத்தனத்தை பில்டப் செய்கிறார். முதலிரவு அறையில் காசோலையை எழுதி வாங்கும் ரிச்சர்ட் மீது கோபம் கொள்ளும் சுதர்சனா, ‘விளக்கை அணைக்க கூட, செக் கிழிக்கணுமா?’ என்கிற போது சுர்ராகிறது. நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் உதய்கிரணுடன் தனது மனைவியை இணைத்து பேசுவதும், ‘முதலிரவு காட்சியை படம் எடுத்து வைத்திருக்கிறேன். பணம் தராவிட்டால் அதை இன்டர்நெட்டில் பரப்பிவிடுவேன்’ என்று அடுக்கடுக்காக மிரட்டுவதுமாக வில்லத்தனத்தின் உச்சிக்கு செல்கிறார் ரிச்சர்ட்.

பெண்களுடன் கெஸ்ட் அவுசில் கொட்டம் அடிக்கும் ரிச்சர்ட்டிடம், நியாயம் கேட்க வரும் மனைவி மற்றும் உதய் கிரணை கேலியாக பேசுவதுடன் திடீரென்று சுதர்சனாவை சுட்டுத்தள்ளி, பழியை உதய் மீது போடுவது திருப்பம்.
எதிர்பார்ப் பை ஈடுசெய்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். ஐ.பி.எஸ் படித்துவிட்டு வரும் மீராவின் யதார்த்தமான அணுகுமுறை நிறைவு. வீரமங்கை வேலுநாச்சரியாரின் ஓரங்க நாடகத்தில் வாளேந்திய கையும், மிரட்டும் விழிகளுமாக மிரள வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருகிறார் ரம்பா. கணவருக்கு எதிரான ஆதரங்களை அள்ளித்தருவது, ரிச்சர்ட்டின் சுயரூபத்தை சி.டி.யில் பதிவு செய்வதற்காக போடும் நாடகம் என மனதில் நிற்கிறார். நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோர்ட்டில் வாதங்களை எடுத்து வைக்கும்போது மிளிர்கிறார் ரோகிணி. லட்சுமிராயுடன் லாரன்ஸ் போடும் ஆட்டம் சூப்பர் டான்ஸ். தேவா இசையில் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘வீணையில் எழுவது…’ பாடல் இனிமையான மெலடி. விஜய் ராகவ் கேமராவும் பாலி ஸ்ரீரங்கத்தின் இயக்கமும் அருமை.