Sunday, February 5th, 2012

தி கராத்தே கிட்

Published on June 17, 2010 by   ·   No Comments
சிறு வயதிலேயே அப்பாவை இழந்த 12 வயது ஜேடன் ஸ்மித், தன் அம்மாவின் பணிமாறுதல் காரணமாக அவருடன் சீனாவுக்கு குடிவருகிறான். அமெரிக்காவின் பழக்க வழக்கத்துக்கு முற்றிலும் மாறுபட்ட சீனாவின் வாழ்க்கை முறைக்கு அவனால் மாற முடியவில்லை. தன்னுடன் படிக்கும் மாணவியுடன் ஜேடனுக்கு நட்பு பூக்கிறது. அது மற்ற சீன மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. குங்பூ கற்கும் அந்த மாணவர்கள் ஜேடனை புரட்டி எடுக்கிறார்கள். அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கிறான்.

அவன் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் பராமரிப்பாளராக இருக்கிறார் ஜாக்கிசான். ஒருமுறை சீன மாணவர்கள் ஜேடனை அடிக்கும்போது ஜாக்கி அவனை காப்பாற்றுகிறார். அப்போதுதான் அவர் ஒரு குங்பூ கலைஞர் என்பது தெரிகிறது. சீன மாணவர்களை சமாளிக்க தனக்கு குங்பூ கற்றுத் தருமாறு ஜாக்கியிடம் கேட்கிறான் ஜேடன். சொந்த வாழ்க்கையால் சோகத்துடன் இருக்கும் ஜாக்கி, அவனுக்கு குங்பூ கற்றுத் தர மறுக்கிறார். மற்ற மாணவர்களுடன் சமாதானமாகபோக அந்த மாணவர்களை சந்தித்து பேசச் செல்கிறார். அப்போது அந்த மாணவர்களின் குங்பூ மாஸ்டருக்கும் ஜாக்கிசானுக்கும் மோதல் வருகிறது. இந்த ஆண்டு நடக்கும் குங்பூ போட்டியில் ஜேடன் சண்டைபோடுவான் என்று சவால்விட்டுத் திரும்புகிறார் ஜாக்கி. அந்த சவாலில் அவர் ஜெயித்தாரா என்பது மீதி கதை.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் நடிப்பிலும் சண்டைக் காட்சியிலும் பிரமிக்க வைக்கிறார். சீனாவில் தன்னால் வாழ முடியாத நிலையை அம்மாவிடம் சொல்லி அழும்போதும் இங்குதான் இருந்தாக வேண்டும் என அம்மா வற்புறுத்தும்போதும் சோக உணர்வுகளை முகத்துக்குள் கொண்டு வரும்விதம் ஆச்சரியம். 12 வயதிலேய சிக்ஸ் பேக் உடலை காட்டி மிரட்டுகிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ‘எண்டர் தி டிராகன்Õ எபெக்ட் கொடுக்கிறார் ஜேடன். தனது வழக்கமான காமெடி, துறுதுறு ஆக்ஷனை விட்டுவிட்டு அடக்கமான குருவாக வாழ்ந்திருக்கிறார் ஜாக்கிசான். சட்டையை கழற்றி மாட்டுகிற ஒரு செய்கையை வைத்தே ஜேடனுக்கு குங்பூ கற்றுக் கொடுப்பது ஆச்சர்யம். அவரது பிளாஷ் பேக் கோடம்பாக்கத்து சரக்கு. ஒரு மாணவனுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரால்ட் ஸ்வார்ட். ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த கிட் பிடிக்கும்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam