Sunday, February 5th, 2012

“கர்ப்பமா இருக்கேன்… காரணம் யாருன்னு தெரியல” – மேக்னா நாயுடு?

Published on June 25, 2010 by   ·   No Comments

நான் கர்ப்பமா இருக்கேன்… காரணம் யாருன்னு தெரியல’ என்று பிரபல நடிகை மேக்னா நாயுடு அனுப்பியது போன்ற மின்னஞ்சல் பலருக்கும் கிடைத்ததால் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.

நடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளார் ஒரு மர்ம ஆசாமி.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடு. இவர் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தமிழில் டி.ராஜேந்தரின் வீராசாமியில் அறிமுகமானார். நடிகர் சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியில் இருந்து அவருடைய தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக இ-மெயில்கள் வந்தன. அவற்றில், ‘நான் (மேக்னாநாயுடு) கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை… உங்க அட்வைஸ் தேவை’ என்று மேக்னா நாயுடு சொல்வது போல அனுப்பப்பட்டது.

மேலும் இந்த இ-மெயில்களுடன் மேக்னா நாயுடு நடிகர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகளும், உறவினர்களும் மேக்னா நாயுடுவை தொடர்பு கொண்டு இ-மெயில் விபரத்தை கூறி ‘உனக்கு என்னாச்சு?’ என்று செல்போனில் திட்டினார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்னா நாயுடு தன்னுடைய இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்களை சோதனை செய்தார். அப்போதுதான் யாரோ ஒரு மர்ம ஆசாமி தன்னுடைய இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, விளையாடியிருப்பது புரிந்தது.

இது குறி்த்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் மேக்னா. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm