Sunday, February 5th, 2012

‘பருத்திவீரன்’ஐ மறக்கச் செய்யும் ‘நான் மகான் அல்ல’

Published on June 25, 2010 by   ·   No Comments
‘பருத்திவீரன்’ படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’ ஆகியப் படங்கள் வெற்றிப்பெற்றாலும், கார்த்தியை பற்றி பேசும்போது என்னவோ ‘பருத்தி வீரன்’ கார்த்தி என்றுதான் அழைக்கிறது கோடம்பாக்கம். அதை கண்டிப்பாக ‘நான் மகான் அல்ல’ படம் மாற்றும் என்று நம்பிக்கை தருகிறார் இப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன்.

சென்னையில், பிறந்து வளரும் ஒரு சராசரி பையனோட கதைதான் ‘நான மகான் அல்ல’. முழுக்க முழுக்க சென்னை பையனாகவே வாழ்ந்திருக்கும் கார்த்தி, இப்படத்தின் அவருடைய கதாபாத்திரத்தை எண்ணி அதிகமாகவே சந்தோஷப்படுகிறார். காரணம் படத்தின் காட்சிகள் அப்படி அருமையாக வந்திருக்கிறதாம்.

இப்படி சந்தோஷத்தில் இருக்கும் கார்த்தியை இன்னும் சந்தோஷப்பட வைத்தது இயக்குநர் சுசீந்திரனின் பேச்சு, “மெளன ராகம் படத்தில் கார்த்திக் சார் நடிச்ச மாதிரி ஒரு கதாபாத்திரம் இது என்று பெரும்பாலான இயக்குநர்கள் சொல்லுவார்கள். ஆனால் அந்த இடத்தை இதுவரைக்கும் யாரும் நிரப்பியதா தெரியவில்லை. இந்த படத்தில் நீங்க அந்த மெளன ராகம் கார்த்திக்கை பார்க்கலாம். இன்னும் 25 வருடங்கள் கழித்து கார்த்தி, நடிச்ச படங்களை திரும்ப நினைத்து பார்த்தார்னா அதில் ‘நான் மகான் அல்ல’ படம் கட்டாயம் இருக்கும்” என்று இயக்குநர் சுசீந்திரன் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கார்த்தி, “மெளன ராகம் படத்துல கார்த்திக் சார் கதாபாத்திரம் போல இது இருக்கிறதோ இல்லையோ, ஆனா படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கிறது. ஏன்ன அப்படி ஒரு இயல்பா படத்தின் காட்சிகள் அமைஞ்சிருக்கு” என்று தன்னடக்கத்துடன் பேசி அமர்ந்தார்.

கார்த்தியின் ‘பையா’ படத்தை வாங்கி, அதன் மூலம் லாபத்தை பார்த்த தயாநிதி அழகிரி, இப்படத்தையும் தன் ‘கிளவுட் நையன்’ நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.

‘நான் மகான் அல்ல’ புகைப்படங்கள்:

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors