மீண்டும் அனுஷ்கா
Published on June 30, 2010 by பிரபலம்.கொம் · No Comments

தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘காஞ்சனா’ படத்தை இயக்குகிறார் லாரன்ஸ். இதில் அனுஷ்கா ஹீரோயின். மீண்டும் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கு படம் இயக்க உள்ளார்.
‘‘தெலுங்கில் ‘மாஸ்’, ‘ஸ்டைல்’, ‘டான்’, தமிழில், ‘முனி’ படங்களை இயக்கினேன். இப்போது ‘காஞ்சனா’. இதையடுத்து தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அனுஷ்கா ஹீரோயின். அடுத்த மாதம் ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. நான் இயக்கும் படத்தில், எனக்கான கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிக்கிறேன்’’ என்ற லாரன்ஸ், படத்துக்கு இசையமைப்பதை நிறுத்தி வைத்திருக்கிறாராம்.