Sunday, February 5th, 2012

பஞ்சாபி இளைஞரை மணமுடிக்க ஆசை : பிரியங்கா சோப்ரா

Published on July 30, 2010 by   ·   No Comments

‘பேஷன்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாபி இளைஞரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது 28வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியதாவது;

இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்வேன், மணமகனாக எனக்கு பிடித்த பஞ்சாபி இளைஞரை தேர்ந்தெடுப்பேன். அவர் உடல் வலிமை மிக்கவராகவும், நல்ல மனம் கொண்டவராக இருக்க வேண்டும். நான் திரையுலகை சேர்ந்தவள் என்பதால் என்னைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளை கண்டு கொள்ளாதவராக என் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். முக்கியமாக பொது இடத்தில் என்னிடம் யாரும் தவறாக நடக்க முயன்றால் அந்த நபரை போட்டு பின்னி எடுக்கும் தைரியம் உள்ளவராகவும் என் உணர் வுகளை புரிந்து கொண்டு எனக்கு மரியாதை அளிப்பவராகவும் இருக்கும் இளைஞர் கிடைக்கும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam