Sunday, February 5th, 2012

ஸ்ரேயாவின் ஆங்கில படத்துக்கு சிக்கல்

Published on July 30, 2010 by   ·   No Comments

தீபா மேத்தா தயாரிப்பில் அவரது சகோதரர் அசோக் மேத்தா இயக்கியுள்ள ஆங்கில படம் குக்கிங் வித் ஸ்டெல்லா. இதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

இப்பட ஷூட்டிங் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் படம் ரிலீசாகவில்லை. படம் முடிந்து முதல் ஆறு மாதங்கள், பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். அதன் பின் இந்தியாவில் திரையிடுவது படக்குழுவின் திட்டம். அதே போல படத்தை திரையிட முயற்சியும் மேற்கொண்டனர். ஆனால் வழக்கமாக தீபா மேத்தாவின் படங்களை வாங்கும் வினியோகஸ்தர்கள்கூட படத்தை வாங்க முன்வரவில்லையாம். காரணம், தீபாவின் முந்தைய படங்களான ஃபயர், எர்த், வாட்டரில் இருந்தது போல் இதில் எந்த சர்ச்சையான விஷயங்களும் இல்லை. கவர்ச்சி பாடலோ, காட்சியோ கூட இல்லை. தீபா மேத்தா இதில் வெறும் தயாரிப்பாளர்தான்.

இந்த காரணங்களால் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம். படத்தில் ரசிகர்களை கவரும் ஏதாவது அம்சம் தேவை என்கிறார்களாம். ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறாராம் தீபா மேத்தா.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam