Sunday, May 20th, 2012
Pirapalam.Com

எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு

Published on July 30, 2010 by   ·   2 Comments
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘எந்திரன்’. இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மலேசியாவில் நடைபெரும் மாபெரும் வண்ணமிகு விழாவில் வெளியிடப்படுகிறது.

ஷாவ்லின் மாங்க்ஸ் அதிரடி சாகச நிகழ்ச்சி

விழாவில், சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் பங்கேற்கும் அதிரடி சாகச சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் சீன துறவிகள், மெய்சிலிர்க்க வைக்கும் பலவிதமான சாதனை சண்டை காட்சிகளை நடத்துகின்றனர். இந்த துறவிகள் இளம் வயதிலேயே குங்க்ஃபூ கலையை கற்றவர்கள். இவர்களின் இந்த நிகழ்ச்சிகள் உலக நாடுகளின் பிரபலமானது. அந்தரத்தில் பறப்பது, கூரிய வாள்களால் மோதுவது, அதில் படுத்துக்கொண்டு சாகசம் புரிவது, தலையால் பல செங்கல்களை உடைப்பது என சீன படங்களில் மட்டுமே பாத்திருக்க கூடிய இந்த சாகசங்கள் நேரடியாக விழா மேடையில் நடத்தப்பட இருக்கிறது.

Readers Comments (2)

  1. REX INBARAJ says:

    ok

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0

  2. REX INBARAJ says:


    Like or Dislike: Thumb up 0 Thumb down 0




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam