இந்திய சினிமாவின் புதிய அடையாளம் : ஐஸ்வர்யா ராய் பெருமிதம்
Published on August 2, 2010 by பிரபலம்.கொம் · No Comments

எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் Ôஎந்திரன்Õ படம் ரொம்ப ஸ்பெஷல். எனக்கும் இந்த படம் ஸ்பெஷல்தான்.
இந்த படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு முழுமையான ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் நடித்திருக்கிறேன். படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த படம் இந்திய சினிமாவின் புதிய அடையாளமாக உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இயக்குனர் ஷங்கரால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். படத்தின் மகத்தான வெற்றி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனைவருக்கும் நன்றி.