Sunday, February 5th, 2012
Pirapalam.Com

அஜீத்தின் 50வது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published on August 5, 2010 by   ·   No Comments

‘அசல்’ படத்திற்குப் பிறகு கார் ரேஸில் கலந்துகொண்ட அஜீத், தனது ஐம்பதாவது படத்தில் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்க, அவரது ரசிகர்களும் தலையின் ஐம்பாதவது படத்தின் பிரச்சனை தலையை பிச்சிக்க வைத்தது.

அந்த அளவிற்கு பிரச்சனையாக இருந்த அப்படத்திற்கு இன்று ஒரு முடிவு கட்டியிருக்கிறார்கள். ‘மங்காத்தா’ படம்தான் அஜீத்தின் ஐம்பதாவது படம். இதை இயக்குபவர் வெங்கர் பிரபு. தயாநிதி அழகிரி தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று (ஆக.4) வெளியிட்டுள்ளனர்.

அஜீத்குமார் தமிழ் சினிமாவுக்குள் வந்த நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று, அஜீத்தின் ஐம்பதாவது படமான ‘மங்கத்தா’ படத்தின் பூஜை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் திரையரங்குகளில் திரையிடப்படும் பிரத்யேக முன்னோட்டக் காட்சிகான படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் வெங்கட் பிரபு, “அஜீத்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம்.

இப்படத்தில் அஜீத்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன்.

படத்தின் என்பது சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. படத்தின் 80 சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இம்மாத இறுதியில் இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது.

வருகிற சம்மர் 2011ஆம் ஆண்டில் கோடை விருந்தாக ‘மங்காத்தா’ வெளிவரும்” என்றார். இசை யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவு சக்திசரவணன், படத்தொகுப்பு பிரவீன் என வெங்கட் பிரபுவின் தொழில்நுட்ப கூட்டணி இப்படத்திலும் இணைகிறது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm