
ஆர்.கே.வேர்ல்ட்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கும் படம் புலிவேஷம் இதில் ஆர்.கே.கதாநாயகனாக நடிக்க ஒரு பரபரப்பான சண்டைக்காட்சி அண்மையில் மகாபலிபுரம் அருகே ஐந்து நாட்கள் படமாக்கப்பட்டது.கதாநாயகி சதாவுடன் சென்னை வரும் ஆர்.கே தஙகுவதற்கு இடமில்லாமல் ஒரு மரத்தை தேர்ந்தெடூதது, அதில் தங்க வைக்கிறார். அவள் தூங்குகின்ற சமயம் பார்த்து, வில்லன் ஆட்கள் அங்கு வந்து தொந்தரவு கொடுக்க. மரத்தில் இருந்து இரங்காமலே கதாநாயகியின் தூக்கமும் கெடாத வண்ணம், மரக்கிளைகளில் தாவி, தாவி எதிரிகளை வீழ்த்தும் அந்த பரபரப்பான காட்சி. மகாபலிபுரம் அருகே படமாக்கப்பட்டது.
ஸ்கார்பியோ என்கிற கேமராவில் இந்த சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கருணாமூர்த்தி. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியது பற்றி ஸ்டண்ட் இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, “சண்டைக்காட்சிகளை படமாக்குவது ரிஸ்க்தான். அதில் தரையில் சண்டைக்காட்சி அமைக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம், ஆனால், மரத்தில் சண்டைக்காட்சிகள் செய்யும் போது நினைத்தபடி துள்ளிக்குதிக்கவோ, அடிபட்டு விழவோ, கிளைகளில் சிக்கி கொள்வது போலவோ படமாக்குவது ரொம்ப ரிஸ்க்காக இருந்தது. இருபத்தைந்து சண்டை கலைஞர்களை பயன்படுத்தி எடுத்தேன். ஒவ்வொருத்தருக்கும் நிறைய காயங்கள் ஏற்பட்டது. அதே போல ஐந்து நாட்கள் அதிக நேரம் மரத்திலே இருந்தார் ஆர்.கே. சண்டைகாட்சிகளின் போது அவருக்கு சிராய்ப்புகள் நிறைய ஏற்ப்பட்டது. புலி வேஷம்னு டைட்டில் வைத்து விட்டு சும்மா இருக்க முடியுமா” என்கிறார்.
இந்த படத்தில் ஆர்.கே., சதா, திவ்யா விஸ்வநாத், கார்த்திக், மன்சூரலிகான், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், ஆஷிஸ் வித்யார்த்தி, இளவரசு, மயில்சாமி, மனோபாலா, ஓ.ஏ.கே.சுந்தர் என நிறைய பேர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ காந்த் தேவா இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார், கலைக்குமார், அண்ணாமலை ஆகியோர் எழுதி உள்ளனர்.