
நடிகர் விஜய் நடித்த காவல்காரன் படத்தின் தலைப்புக்கு சத்ய மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது காவல் காதல் என்று பெயர் வைத்திருக்கின்றனர். அதே போல் சிம்பு நடித்து வரும் வானம் படத்தின் தலைப்பிற்கு சிக்கல் வந்துள்ளது.ஒரு படம் தயாரிக்கும் நிறுவனம். பிலிம் சேம்பர் அல்லது தயாரிப்பாளர் சங்கம் அல்லது கில்டு ஆகிய இடங்களில் பட நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் பெயரில்தான் படத் தலைப்புகளை பதிவு செய்ய வேண்டும். ஒரு நிறுவனம் இரண்டு படத் தலைப்புகளுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது. ஒரு படத் தலைப்பு பதிவு செய்து ஒரு வருடம் வரை பதிவு செய்தவர்களுக்கு உரிமை உள்ளவர் ஆவார். படம் எடுக்க நாட்கள் அதிகமானால் அந்த தலைப்பை மறு பதிவு செய்து கொள்ள வேண்டும் ஒன்றறை வருடத்திற்கு மேலாகியும் படத் தலைப்பு செய்யப்பட்டு படம் தொடங்கப்படாமல் இருந்தால் வேறு ஒரு தயாரிப்பாளர்களுக்கு அச்சங்களின் செயற்குழு பரிந்துரை செய்து விடும். இதுதான் வாடிக்கை. இது படத் தலைப்பு மட்டும் பதிவு செய்து விட்டு படம் எடுக்காதவர்களுக்கு பொருந்தும்.
இந்த மூன்று தயாரிப்பு சங்ககளிலும் ஏதாவது ஒரு இடத்தில் பதிவு செய்தால், மற்ற சங்ககளுக்கு அந்த சங்கம் கடிதம் அனுப்பி, இது போன்ற தலைப்பை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம் உங்கள் சங்கத்தில் பதிவு செய்து இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும், இல்லை என்றால்,நாங்கள் பதிவு செய்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்று கடிதம் மூலம் தெரிவித்து விடுவார்கள்.
இதில் சிம்பு நடிக்கும் பட நிறுவனம் இந்த மூன்று சங்ககளிலும் தலைப்பு பதிவு செய்யவில்லை என்பது, வானம் படத்தின் தயாரிப்பாளர் வினோதன் குற்றச்சாட்டு.