Sunday, February 5th, 2012

வம்சம், நான் மகான் அல்ல, இனிது இனிது… இம்மாத திரை விருந்து!

Published on August 12, 2010 by   ·   1 Comment

இம்மாத திரை விருந்தாக ‘வம்சம்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, இனிது இனிது, நான் மகான் அல்ல உள்பட 5 புதுப்படங்கள் வெளியாகின்றன.வருகிற வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 13-ம் தேதி ‘வம்சம்’ மற்றும் காதல் சொல்ல வந்தேன் ஆகிய இரு படங்களும் வெளியாகின்றன. வம்சம் படத்தில் முதல்வர்  கருணாநிதியின் பேரன் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் ‘பசங்க’ ஹிட் படத்தைத் தந்தவர்.

ஒரு வம்சத்துக்குள் நடக்கும் மோதல், சென்டிமெண்ட் கதையே இப்படம் என்கிறார் பாண்டிராஜ்.

‘காதல் சொல்ல வந்தேன்’ காமெடி ஸ்பெஷலிஸ்ட் பூபதி பாண்டியன் படம். இதில் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்துள்ளனர். பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை வெற்றிப் படங்களை இயக்கியவர். சி.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். காதல் சொல்ல வந்தான் ஒரு இளைஞன். ஆனால் சொல்லவில்லை. காதல் என்ன ஆனது என்பதே கதை என்றார் இயக்குனர் .

‘இனிது இனிது’ படம் வருகிற 20-ந்தேதி ரிலீசா கிறது. பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார். தெலுங் கில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹேப்பி டேஸ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். கல்லூரி மாணவர்கள்  வாழ்க்கையே இப்படம்.

கார்த்தி, காஜல்அகர்வால் ஜோடியாகயுள்ள ‘நான் மகான் அல்ல’ படமும் இதே நாளில் ரிலீசாகிறது. சுசீந்திரன் இயக்கியுள்ளார். கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சென்னையில் நடுத்தர குடும்பமொன்று சந்திக்கும் பிரச்சினைகளே கதை.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் ‘மாஸ்கோவின் காவிரி’ படம் வருகிற 27-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ராகுல், சமந்தா ஜோடியாக நடித்துள்ளனர்.

எந்திரன் ரிலீஸுக்கு முன்பு இருக்கிற படங்கலை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்கள் மும்முரம் காட்டுவதால், இன்னும் சில படங்களும் இந்த பட்டியலில் சேரக் கூடும்.

Readers Comments (1)

  1. navinan says:

    அனைத்து படங்களையும் எதிர் பார்த்து காத்து இருக்கின்றேன்.

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm