Pirapalam.Net » நேர்காணல்

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி
“மாப்ள, நம்ம தலயோட ஒயிஃப் எவ்வளவு சிம்பிளா இருக்காங்க பார்த்தியா? எதிரில் யார் வந்தாலும் பந்தாவா முகத்தைத் திருப்பிக்காம, பார்த்துச் சிரிக்கிறாங்க… ‘நல்லா இருக்கீங்களா மேடம்’னு கேட்டா, பதிலுக்கு அவங்களும் விசாரிக்கிறாங்க. மத்தவங்க விளையாடும்போதும் கைதட்டி உற்சாகப்படுத்துறாங்க” – இப்படி தேனி முழுக்க தெருவுக்குத் தெரு அல்டிமேட் ஸ்டாரின் மனைவி ஷாலினியின் அடக்கத்தையும் அன்பான குணத்தையும் பற்றிப் புகழாத ஆளில்லை… மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் விளையாடுவதற்காக தேனி வந்த ஷாலினியை போட்டிகளுக்கு மத்தியில் நாமும் ஒரு பேட்டிக்காக சந்தித்தோம்…. மகள் அனோஷ்கா, அப்பா பாபுவோடு நம்மிடம் ஆர்வமாகப் பேசத் துவங்கினார் ஷாலினி.

தேனி டோர்னமெண்ட் எப்படி?

டபுள்ஸ், மிக்ஸ் டபுள்ஸ் விளையாடி செமி பைனல் வரை வந்திருக்கேன். ‘கப்’ ஜெயிக்கணும்! இல்லன்னா எம் பொண்ணு விடமாட்டா.

அனோஷ்கா வீட்ல யாரோட செல்லம்?

எங்க ரெண்டு பேரோடையும்தான். அப்பா வெளியில ஷூட்டிங் போயிட்டாருன்னா மொபைல்ல ஏதாவது ஸ்டோரி சொல்லிட்டே இருக்கா. அவரு சாப்பிட்டதைக் கேட்டுட்டு, இவ சாப்பிட்டதைச் சொல்லுவா, எங்க வீட்டுப் பெரிய மனுஷி இவங்கதான்.

அஜித் ஷாலினி ஜோடி எப்பவுமே புது தம்பதிகளாகவே யூத்தா ஃபிட்னஸா இருக்கீங்களே, அதோட ரகசியம் என்ன?

அவரோட ஆரோக்கியம்; நல்ல மனசு. என்னோட இளமை; அவர் எனக்குக் கிடைத்த சந்தோஷம். இதைவிட கிஃப்ட் என்ன வேணும். இதுதான் ரகசியம்.

திரும்பத் திரைக்கு வருவீங்களா?

குழந்தைய பார்த்துக்கணும். அதுதான் முக்கியம். சினிமாவுல நடிக்கறதுக்கெல்லாம் டயம் இல்ல. இப்ப அது மைண்ட்லயே இல்லை.

பேபி ஷாலினியா நீங்க சினிமாவில் வந்த மாதிரி பேபி அனோஷ்கா வருவாங்களா?

அந்த மாதிரி ஐடியாவே இல்லை. அவர் மாதிரி தைரியமா, தனித்திறமையோட – எல்லோருக்கும் உதவுற மனசோட, எளிமையா, தன்னம்பிக்கையோட வாழ்ற முறையைக் கத்துக்கொடுக்கணும். அவளுக்காக காசு பணம் சேர்க்கறதை விட நல்ல பண்போட வளர்க்கணும். அதுதான் அஜித்தோட ஆசை.

அஜித் வீட்டுல சிக்கனவாதியா? செலவாளியா?

நண்பர்களுக்கு, மற்றவங்களுக்கு உதவுறதுல கணக்குப் பார்க்க மாட்டார். வீட்டுக்கு அவசியமானதை வாங்கிக் கொடுப்பார்.

விஜய்-அஜித் இருவரையும் போட்டியாளர்களாகவே சினிமா ரசிகர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் எப்படி? நிஜத்தில் அவர்கள் எப்படி?

ஆமாம். ரெண்டு பேருக்கும் போட்டிதான். அது ஆரோக்கியமான போட்டி. ஆரோக்கியமான போட்டி நல்லதுதான். எதிலும் போட்டி இருக்கணும். ஆனா, அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நானும், விஜய் ஒய்ஃப்போட நல்ல ப்ரெண்ட்ஸ். எங்க ரெண்டு பேரோட குழந்தைகளுமே எங்களுக்குச் செல்லம்தான். பசங்களும் ஒருத்தருக்கொருத்தர் நல்ல ப்ரெண்ட்ஸ்.

ரஜினியை நலம் விசாரிச்சீங்களா?

ட்ரீட்மெண்ட்டுக்குப் போன பொழுது நலம் விசாரிச்சோம். நேர்ல இன்னும் போகல. போன்ல விசாரிச்சிட்டேதான் இருக்கோம்.

ஷூட்டிங் இல்லைனா அஜித் என்ன செய்வார்?

மேக்ஸிமம் வீட்டுலதான். அவரு வெளியில அடிக்கடி ஷூட்டிங் போயிடுறதுனால ரெஸ்ட் கிடைச்சா வீட்டுலதான் டைம் பாஸிங். வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு செஞ்சு போட்டு அசத்துவாரு. குக்கிங் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். என ஒரு எளிமையான குடும்பத்தலைவியாய் பேசிய ஷாலினியை வியந்தபடி விடைபெற்றோம்.

நன்றி: குமுதம்

Other also read:

விக்ரமின் கரிகாலன்

‘மங்காத்தா’ சிக்கல் விலகியது!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

விஜய்யுடன் விஜய்?!

என் செல்வாக்கு சரியவில்லை! – த்ரிஷா
நடிகை த்ரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜித்துடன் அவர் நடித்த ‘மங்காத்தா’ ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. த்ரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

அஜித்துடன் நடித்தது எப்படி இருந்தது?

அஜித் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். ‘மங்காத்தா’ மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ‘மங்காத்தா’ ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.

‘மங்காத்தா’வில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களா?

இல்லை. அப்பாவித்தனமான ரோல். அதில் எனக்கும் அஜித்துக்குமான காதலும் இருக்கும்.

இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?

‘கட்டா மிட்டா’வுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை.

தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா?

என்னைப் பொறுத்தவரை இந்தி திரையுலக்கு போவது என்பது பெரிய ஸ்டெப். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.

படங்களை தேர்வு செய்வதில் ரொம்ப கவனம் செலுத்துகிறீர்களா?

ஆமாம். மாதம் 30 நாட்களும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது.

நீங்கள் முன்பு போல் பிரபலமாக இல்லையே?

நான் அப்படி நினைக்கவில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக் கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.

நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்கு போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத்தான் போட்டியாக கருதுகிறேன். புதுமுகங்கள் வருகை என்பது புதிய டிரெண்ட்.

Other also read:

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

இன்று ‘ரஜினிகாந்த்’ பிறந்த நாள்?

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

என் எதிரிகளை எனக்கு நன்றாகத் தெரியும்! – அஜித்
“எல்லாவிதமான எமோஷன்களையும் அனுபவித்து கடந்து வந்துவிட்டேன். நம்முடைய சொல்லுக்கு மரியாதை வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய படங்கள் வெளிவரும்போதும், என்னைப்பற்றி தவறான கருத்துக்களைக் கிளப்பிவிடுகிறார்கள்” என்று மனதில் பட்டதை பட் பட்டென்று கொட்டிய அஜித்தின் பக்குவப்பட்ட பேச்சு, அதே வேகத்தில் தொடர்கிறது…

நடிகர்கள் படத்திற்குப் படம் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

நடிகர்கள் நாங்கள் நடிக்க வரும்போது, ‘தம்பி உங்களுக்கு மார்க்கெட் இல்ல. இவ்வளவுதான் சம்பளம். பின்னாடி கோடி கோடியாக வாங்கப் போறீங்களே’ என்று சொல்கிறீர்கள். கொஞ்ச வருடங்கள் கழித்து நடிகர்களுக்கென ஒரு மார்க்கெட் உருவான பிறகு ‘சம்பளத்தைக் குறை’ என்கிறீர்கள். அப்புறம் எப்போதுதான் சம்பாதிப்பது என்று தான் யாருக்கும் தெரியவில்லை.

உங்களைக் குறிவைத்து அவ்வப்போது கிளம்பும் சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்காமல் ஏன் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறீர்கள்?

ஒருத்தன் ஒதுங்கிப் போனால் அவனுக்கு தைரியம் இல்லை, கோழை என்று அர்த்தமில்லை. ஒரு வீரனிடம் சண்டைக்குப் போகலாம். அவனிடம் தோற்றால்கூட நமக்குப் பெருமைதான். ஒரு வீரனைச் சந்தித்து ரொம்ப நாட்களாயிற்று. இன்று நேருக்கு நேராக நின்று பேசுபவர்கள் குறைவு. வெளிப்படையாக நின்று அம்பு எய்பவர்கள் இருந்தால் தைரியமாக எதிர் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களை முன்னிறுத்திவிட்டு அவர்களுக்குப் பின்னாடி ஒளிந்தபடி அம்பு விடுபவர்களை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனால் சிலர் வம்புச் சண்டைக்கு இழுக்கிறார்கள். சண்டைக்கு வருபவர்கள் உடனே ஜாதியையோ அல்லது மதத்தையோ தங்களுக்கு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். இவர்களிடம் சண்டை போடுவதால் என்ன பயன்? நாமும் இவர்களோடு இறங்கி வந்து சண்டை போட்டால் அசிங்கம்.

என்னுடைய படங்களுக்கு ஒரு பெரிய ஓபனிங் இருக்கிறது என்று மீடியாவில் அடிக்கடி சொல்கிறீர்கள். இதை மனதில் வைத்தே என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில், என்னைப் பற்றியோ அல்லது என் படம் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள். இதனால் என்னுடைய படத்திற்கான ஓபனிங் குறையும் என்ற எண்ணம்தான் காரணம். இது மட்டுமில்லாமல் என்னுடைய ரசிகர்களைக் குறிவைத்து பல புகார்களைக் கூறி, அவர்களை கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது. இதனால் என் மீதும் என் ரசிகர்கள் மீதும் மக்களிடம் ஒரு வெறுப்பை உண்டாக்கவும், ரசிகர்களுக்கு என் மீதும் ஒரு கோபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர். இதுவும் நான் என் மன்றங்களைக் கலைப்பதற்கு ஒரு காரணம். என் மீதான கோபத்தை என் ரசிகர்கள் மீது காட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று மன்றங்களைக் கலைத்துவிட்டேன். இப்போது வேண்டுமானால் என்னைத் தாக்குங்கள். இனியும் என் ரசிகர்களைத் தாக்க வேண்டாம். எனக்கு எதிரிகள் அரசியலில் இல்லை. சினிமாவில்தான் ஒரு சில எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

நீங்கள் சொல்வதையெல்லாம் பார்த்தால் விஜய்யைதான் மறைமுகமாகப் குறிப்பிடுகிறீர்கள் போலிருக்கிறதே….?

என் தம்பி விஜய்யை நான் சொல்லவில்லை. நீங்களும் திசை திருப்பாதீர்கள்.

இவ்வளவு பிரச்சினைகள் உங்களைச் சூழ்ந்திருக்கும் போது அதற்கு யார்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

எந்த அரசியல் தலைவர்களும் பிரச்சினையை உருவாக்குவதில்லை. அவர்களைச் சுற்றியிருக்கும் ஒருசிலர் மட்டுமே இதைக் கிளப்பிவிடுகிறார்கள். இவர்களை யார் கவனிப்பது? கட்டுப்படுத்துவது? தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஒன்றும் பண்ணுவது இல்லை. வெறும் தொடர்பில் மட்டுமே இருப்பவர்கள், மேலிடத்திலிருந்து சொன்னார்கள் என்று இவர்களாகவே ஒரு பட்டியலைக் கொடுக்கிறார்கள். இவர்களாகவே ஏதாவது சொல்லும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அது உண்மையா என்று மேலிடத்திற்கு போன் பண்ணிக் கேட்பது நாகரிகமாகுமா? இது நிறைய பேருக்குப் புரியாமல் இருந்தது. அதை எடுத்துச் சொல்கிறேன் அவ்வளவுதான் என்று முகம் மலர்ந்தவர், “யாரும் யாரையும் தூக்கிவிட வேண்டாம். கைகொடுக்க வேண்டாம். உழைக்க விட்டால் போதும். எல்லோரும் பிழைத்துக்கொள்ள முடியும்.”

Other also read:

ராணாவுக்கு முன் சுல்தானா?

விஜயின் நண்பன் படத்தில் நடிகை ஆண்ட்ரியா

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்

லண்டனில் நடந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இறுவட்டு வெளியீட்டு விழா

சீமானைக் கைவிட்டார் விஜய்?

ஓவர் பில்ட்-அப்னு சிரிக்காதீங்க! – ஜெனிலியா
‘பாய்ஸ்’ படம் வெளி வந்து எட்டு ஆண்டுகள் ஆச்சு என்பதை நம்ப முடியவில்லை. அதே இளமை… அதே அழகு… அதே குறும்பு. ‘வேலாயுதம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் இருந்தார் ஜெனிலியா.

தமிழ்ல அப்பப்போ தலை காட்டிட்டு காணாமப் போயிடுறீங்க… என்னதான் பிரச்சினை?

நத்திங்! அடுத்தடுத்து தமிழில் படம் பண்ணணும்னு ஆசைதான். ஆனா, இந்தி, தெலுங்குனு ஓடிட்டே இருக்கேன். நடுவில் சந்தோஷ் சிவனுக்காக ‘உருமி’ன்னு ஒரு மலையாளப் படம். கிடைக்கிற நேரத்தில் ரொம்ப செலெக்டிவ்வான ஸ்க்ரிப்ட்டில் தானே நடிக்க முடியும். இதோ இப்போ ‘வேலாயுதம்’ ஷூட்டிங் ஆறு மாசமா நடக்குது. ஆனாலும், காத்திருந்து நடிக்கிற அளவுக்கு பவர்ஃபுல் ரோல்.

டைரக்டர் ராஜா கதை சொன்னப்போ, ‘நம்மால் இதைப் பண்ண முடியுமா’ன்னு எனக்கு யோசனையா இருந்தது. ஆனா, ராஜாவுக்கு என் மேல் நம்பிக்கை. படத்தில் நான் ஒரு டி.வி. ஜர்னலிஸ்ட். விஜய்க்கு சமமான காட்சிகள் எனக்கு உண்டு. ஓவர் பில்ட்-அப்னு சிரிக்காதீங்க. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்!

ஆனா, என்னதான் ஸ்கோப் உள்ள கேரக்டர்னாலும், கிளாமரில் ஹன்சிகா ஸ்கோர் பண்ணிருவாங்களே?

ஹன்சிகா, என் க்ளோஸ் ஃப்ரெண்ட். தமிழ் சினிமாவில் இப்போ அவங்கதான் கிளாமர்ல பின்றாங்களாமே? இந்தப் படத்தில் ஹன்சிகா அக்மார்க் கிராமத்துப் பொண்ணா வர்றாங்க. நான் சிட்டி பொண்ணு. எங்க ரெண்டு பேருக்கும் க்ளாஷ் ஆகுற மாதிரி எந்த ஸ“னும் இல்லை!

விஜய் என்ன சொல்றார்?

‘சச்சின்’ படத்துக்கு அப்புறம் இப்ப தான் விஜய்யைப் பார்க்கிறேன். ஜாலியா அப்படியேதான் இருக்கார். இப்போ இன்னும் ஃப்ரெண்ட்லி ஆகிட்டார். மிசஸ் சங்கீதா விஜய், அவங்க வீட்டு டின்னருக்கு இன்வைட் பண்ணாங்க. அவ்ளோ அழகா இருக்காங்க சங்கீதா. அவங்க பையன் சஞ்சய், ‘ஜெனி அக்கா’னு கூடவே ஒட்டிக்கிட்டான். ஸ்வீட் ஃபேமிலி!

பாலிவுட்டில் ‘அசினுக்கு நான் சீனியர்’னு நீங்க சொல்றீங்க. ஆனா, அவங்க அடுத்தடுத்து அமீர், சல்மான், ஷாரூக்னு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறாங்க. நீங்க இன்னும் சின்ன ஹீரோக்களுடன்தானே நடிச்சுட்டு இருக்கீங்க?

‘அசினுக்கு நான் சீனியர்’னு எப்பவும் நான் சொன்னதே இல்லை. சொல்லப் போனா, நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில்தான் பாலிவுட்டில் நுழைஞ்சோம். அசின் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களைச் சந்திச்சா, சினிமாவைத் தவிர நிறைய விஷயங்கள் பேசுவோம். அதே மாதிரி த்ரிஷாவும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்!

உங்களுக்கும், ரித்தேஷ் தேஷ்முக்குக்கும் கல்யாணம்னு செய்தி வந்தது. ஆனா, நீங்க எதுவும் சொல்லலையே?

என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பை நான் யாருக்கும் கொடுக்கலை. எப்படித்தான் இப்படி எல்லாம் பேசுறாங்கன்னு தெரியலை. காதல், கல்யாணம்னு யோசிக்கக்கூட எனக்கு நேரம் இல்லை. என் பார்ட்னரை நான் தேர்ந்தெடுத்தால், அதில் ரகசியம் என்ன இருக்கு?

‘பாய்ஸ்’ பசங்களோட இப்போ பேசுறது உண்டா?

சித்தார்த்தும், நானும் தெலுங்கில் அடிக்கடி பார்த்துப்போம், பேசிப்போம். பரத், தமன் டச்லதான் இருக்காங்க. அப்போ இருந்ததைவிட இப்போ எல்லாரிடமும் நல்ல மெச்சூரிட்டி. மணிகண்டன், நகுல் ரெண்டு பேருடனும் பேசவே இல்லை. இந்தப் பேட்டிக்குப் பிறகு, அவங்களும் ஹலோ சொல்வாங்கன்னு நினைக்கிறேன்!

Other also read:

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

கார்த்தி தம்பதியை இல்லத்திற்கே சென்று வாழ்த்திய முதல்வர்!

‘புதுமாப்பிள்ளை’ கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

கார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா!

ஈழம் பற்றிய கதையை “10 ஆண்டுகளாக வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடமும், நடிகர்களிடமும் நாயாய் அலைகிறேன்” – தங்கர்பச்சான்
எந்த நேரமும் சமூகக் கோபத்தையும், குமுறலையும் சட்டைப் பையிலே வைத்திருக்கும் பொறுப்பான படைப்பாளி தங்கர்பச்சான். எல்லோரையும் எதிர்பார்க்க வைத்த அவரின் ‘களவாடிய பொழுதுகள்’ படம் ஒரு வழியாக வெளியாகப் போகிறது. தங்கரை அவர் வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

ஏன் இவ்வளவு தாமதம்?

இன்றைக்கு திரையுலகம் கலைஞர்கள் கையில் இல்லை. முன்பெல்லாம் திரைப்படத்தில் முதலீடு செய்பவர்கள் ஒரு நேர்மையைக் கடைப்பிடித்து வந்தார்கள். இப்ப பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினாலும், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தாலும் திரையுலக விதிமுறைகளே மாறிப் போயிருச்சு. ஒரு ஒழுங்கு இல்லாமல் சீர்குலைஞ்சு போச்சு. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்குமான உறவு, தியேட்டர் உரிமையாளர்களின் உறவு எல்லாமே சீர்குலைஞ்சு போச்சு. இந்த உறவு சீர்குலைந்ததன் விளைவே படங்கள் முழுதாக முடிந்த பிறகும் முடங்கிப் போவதற்கான காரணம்.

ஒழுங்கு சீர்குலைவு என்று எதைச் சொல்றீங்க…?

முன்பு கொஞ்சத் தொகையோடு இயக்குநரை நம்பி படம் எடுக்க வருவாங்க. பிறகு வட்டிக்கு வாங்கி முழுப் படத்தையும் முடித்துவிட்டு நேர்மையாக பேசிய வட்டியோடு தொகையை திரும்பக் கொடுப்பார்கள். குறித்த நேரத்தில் படத்தை இயக்குநர் எடுத்துக் கொடுப்பார். முறையான விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். ஒரு படம் ஓடா விட்டாலும் அடுத்த படத்தில் அந்தத் தொகையை மீட்பது பற்றி ஒரு சமரசத்திற்கு வந்து நல்ல உறவோடு இருந்தார்கள். இப்ப அது எல்லாமே போயிடுச்சு. கொள்ளைக் கூட்டம் மாதிரி சுருட்டத்தான் பார்க்குறாங்க. காலங்காலமா விவசாயம் செய்து வந்த விவசாயிகிட்டயிருந்து அடித்து, நிலத்தைப் பிடுங்கிட்டு அவனை கூலி வேலை பார்க்க வைச்சது மாதிரி ஆகிடுச்சு.

ஈழப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசுறீங்க. நீங்க ஒரு திரைப்படத்தை எடுத்து ஈழப் பிரச்சினை பற்றி உலக கவனத்தைப் பெற வைக்கலாமே?

இந்தக் கேள்வியை மற்ற இயக்குநர்களிடம் ஏன் நீங்க கேட்கலை? ஈழப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிற திரையுலகப் படைப்பாளிகளிடம் கேளுங்க. ஏன் கேட்க மாட்டேன்குறீங்க. ஆனால் ஈழம் பற்றி இன்றும் முழுதாக நமக்குத் தெரியவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினைகளை பதிவு செய்து ‘தாய்மண்’ என்ற பெயரில் நாவலா எழுதத்தான் நினைச்சேன். ஆனால், கடைசி தமிழன் வரைக்கும் போய்ச் சேர இதைத் திரைப்படமாக எடுத்தால்தான் முடியும். இந்தப் படத்தை எடுக்கத்தான் தமிழ்நாட்டிலிருந்து ஈழம் போனேன். முதன் முதலா ஈழம் போன முதல் ஐந்து பேரில் நான் ஒருவன். இந்தப் படத்தில் போராளியையோ, ஒரு துப்பாக்கியையோ நான் காட்டப் போவதில்லை.. இந்தக் கதையை 10 ஆண்டுகளாக வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடமும், நடிகர்களிடமும் நாயாய் அலைகிறேன். யாரும் செவி மடுக்கவில்லையே. யார் குற்றவாளி, நானா?

‘களவாடிய பொழுதுகள்’ எந்த மாதிரியான படம்?

இன்றைக்கு தொண்ணூறு சதவிகிதம் பேர் காதலிக்கிறார்கள். காதல் இல்லாமல் இல்லை. ஆனால் இவர்களில் யார் திருமணம் செய்து வாழ்கிறார்கள்? இது எவ்வளவு பெரிய அவஸ்தை. தாலி கட்டியதும் காதல் உணர்வு மாறிடுமா என்ன? நேர்மையான காதலர்களுக்கு இன்னும் அவஸ்தை. இது வாழ்க்கையின் இன்னொரு பகுதியைப் பேசும். ஆண், பெண் உறவில் இருக்கின்ற உண்மையான காதல். அந்தக் காதல் கொடுக்கின்ற வலியும்தான் ‘களவாடிய பொழுதுகள்’.

பிரபுதேவா எப்படி?

பிரபுதேவா ஒரு அற்புதமான கலைஞன். தனக்குள் ஒரு தவிப்பை எப்பவுமே வெச்சுக்கிட்டு நடிச்சார். அவரை வெறும் நடனக் கலைஞராக மட்டுமே பார்த்த திரையுலகத்திற்கு இந்தப் படத்தில் பதில் இருக்கிறது.

Other also read:

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

காஞ்சனா

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

கார்த்தி தம்பதியை இல்லத்திற்கே சென்று வாழ்த்திய முதல்வர்!

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

காதல் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இல்லை! – ஹன்சிகா மோத்வானி
‘மாப்பிள்ளை’க்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அம்மணியின் கால்ஷீட்டுக்கு இப்போது பெரிய லைன். ‘மாப்பிள்ளை’ படம் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். பட ரிலீஸ் வரை மனம் திக் திக் என்றே இருந்தது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் ரிலீசுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை தங்கள் வீட்டுப் பெண் போல் ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து, நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது என் லட்சியம் என்கிறார் ஹன்சிகா.

‘எங்கேயும் காதல்’ எந்த மாதிரியான கதை?

அழகான காதல் கதை. காதல் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இல்லை. காதல்தான் எல்லாத்துக்கும் முக்கியமானதா இருக்குது. இந்தப் படத்துல இந்தியாவுல இருந்து பாரிஸ் வர்ற ஜெயம் ரவி மேல, அங்கேயே இருக்கிற எனக்கு காதல் வருது. இந்த காதல் என்னாவாகுது? ஒண்ணு சேர்றோமா, இல்லையாங்கறதுதான் கதை. ஜாலியா, பரபரன்னு இருக்கும். ஜெயம் ரவி செட்ல எனக்கு நிறைய உதவி பண்ணினார். நல்ல நடிகர். அதிகமா ஜோக் சொல்லிட்டே இருப்பார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.

பிரபுதேவா இயக்கத்துல நடிச்சது எப்படியிருக்கு?

அவர் சிறந்த கோரியோகிராபர்னு எல்லாருக்கும் தெரியும். இந்தியில அவர் இயக்கிய ‘வான்டட்’ பெரிய ஹிட். அதுக்கு முன்னால அவரோட நடனங்களை பார்த்து பிரமிச்சிருக்கேன். நான் அவரோட ரசிகை. அவர் இயக்கத்துல நடிக்க வாய்ப்பு வந்திருப்பது எனக்கு கிடைச்ச லக்குனு சொல்வேன்.

படத்தோட மொத்த ஷூட்டிங்கும் பாரிஸ்ல நடந்திருக்கு?

ஆமா. இதுவரை படமாக்கப்படாத புது லொகேஷன்கள்ல பிரபுதேவா ஷூட் பண்ணியிருக்கார். ஒவ்வொரு இடமும் பளிச்சுனு இருக்கும். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகு, ‘அந்த லொகேஷன் எங்க இருக்கு; இந்த லொகேஷன் எங்க இருக்கு’ன்னு கேட்டு நிறைய டைரக்டர்கள், தங்களோட படத்தை கண்டிப்பா இங்க ஷூட் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ரிச்.

தொடர்ந்து 15 மணிநேரம் ஷூட்டிங்ல கலந்துக்கிட்டீங்களாமே?

பாரிஸ்ல தொடர்ந்து சில நாட்களா மழை பெய்துட்டே இருந்தது. ஷூட் பண்ண முடியலை. ஏற்கனவே போட்ட ஷெட்யூல்படி எங்களுக்கு தாமதம் ஆச்சு. உடனே, மழை விட்டு லேசா மேகம் மறைஞ்சதும் தொடர்ந்து 15 மணி நேரம் ஷூட்டிங் நடத்தி 3 நாள் இடைவெளியை சரி கட்டினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது.

அடுத்து?

விஜய் ஜோடியா ‘வேலாயுதம்’, உதயநிதி ஸ்டாலின் ஜோடியா ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்கள்ல மதுரை கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டிருக்கிறேன்.

Other also read:

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!

கரீனாவுக்கு கிடைத்தது இலியானாவுக்கு கிடைக்குமா?

இளமையாக உருமாறிய கமல்

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

நான் அமீரை முழுசா நம்புறேன்! – நீது சந்திரா
கன்னித் தீவு பொண்ணு நீது சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ‘ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?’- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீது.

‘ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?

அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன். அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!

அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே… என்ன ஆச்சு?

நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பா தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!

லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?

நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத்தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!

நல்லாத் தமிழ் பேசுறீங்களே?

நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக்கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு தமிழ் புத்தகத்தையே வாசிச்சுக் காண்பிக்கிறேன்!

உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?

நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் ‘தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்… நீத்து சந்திரா!

நீதுன்னா என்ன அர்த்தம்?

‘எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!

Other also read:

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா – இலியானா – தபு!!

காதல் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இல்லை! – ஹன்சிகா மோத்வானி

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

கவர்ச்சிக்கும் ஓகே சொன்ன சோனியா!

‘அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌…!’ – மோ‌னி‌கா‌வின் ‘ஜில்’ பே‌ட்‌டி‌
முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌கை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌.

இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌னால் எந்த நடிகைக்குத்தான் சந்தோஷமாக இருக்காது… இதோ அப்படி ஒரு குஷியில் மோ‌னி‌கா‌வி‌ன்‌ அளித்த பேட்டி:

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌…

முத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌னு நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க…

இவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌.

நஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.

அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌?

கண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு. அது எனக்கு வர்ற ஈமெ‌யி‌ல்‌லயே தெரியுது. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.

உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌?

அதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு.

மற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க… ஏன்‌?

கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌ கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.

அதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌, ‘என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு’ சொ‌ல்‌றா‌ங்‌க.

ஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுழி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.

பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌?

அப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌…

அகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல நா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌போ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.

இது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ “ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌” படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. “நோ‌ என்‌ட்‌ரி‌” இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ ஈஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களில்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.

உண்மையிலேயே பிஸியோ பில்டப்போ… பெண்கள் சந்தோஷமா இருந்தா பார்க்க நல்லாத்தான் இருக்கு!

Other also read:

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்

நார்வேக்கு படையெடுத்த இயக்குநர்கள்!

அனுஷ்கா அடம்பிடித்ததால் கவ்விக் கொண்ட காஜல்!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

குத்தம் சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க. அதுக்காக வருத்தப்பட முடியுமா? கஞ்சா கருப்பு
கொஞ்ச நாளாவே பெரிய மீசை, மெகா சைஸ் அருவாவோடவே கெத்தா வலம் வரும் காமெடியன் கஞ்சா கருப்பு, இப்பல்லாம் ரொம்ப பிஸி. சந்திச்சு பேச கூட நேரமில்ல அவருக்கு. மனுஷனுக்கு அவ்ளோ கமிட்மெண்ட்ஸ். இருந்தாலும் நமக்குனு சில நிமிடங்கள் ஒதுக்கி, கேட்ட கேள்விகளுக்கு மனசுல பட்டத பளிச்சுனு சொன்னாரே பார்க்கணும்… கருப்பு கருப்புதான்!

உங்க படத்துல டபுள் மீனிங் டயலாக் கேட்க முடியலையே?

படங்கள்ல டபுள் மீனிங் டயலாக் பேசக் கூடாதுங்கிறது என் கொள்கை. அதை இப்பவரைக்கும் கடைபிடிக்கிறேன். யாரும் என்னை இரட்டை அர்த்தம் வசனம் பேசுன்னு கட்டாயப்படுத்துறது கிடையாது. எனக்கு கிடைச்ச டைரக்டர்கள் அப்படி. ஒரு ரசிகனை அவன் அடிமனசுல இருந்து சிரிக்க வைக்கணும். இதைதான் அமீரும், பாலாவும் எனக்கு கத்துக் கொடுத்திருக்காங்க என்கிறார், கஞ்சா கருப்பு.

சமீப காலமா பெரிய மீசையோட வர்றீங்களே?

டைரக்டர் ஹரி, ‘வேங்கை’யில பிரமாதமான கேரக்டர் கொடுத்திருக்கார். அதுக்கான கெட்டப்தான், ‘சிங்கம்’ சூர்யா மீசை. இதில் சைக்கிள் கடை கணேசனா வர்றேன். காமெடி பட்டைய கௌப்பும். பிறகு ‘ஆதி பகவன்’, ‘போராளி’, ‘அமரா’, ‘பாக்கணும் போல இருக்கு’, ‘தில்லு முல்லு’ உட்பட நிறைய படத்துல காமெடி பண்றேன்.

ஒரேமாதிரி நடிக்கிறீங்கன்னு சொல்றாங்களே?

குத்தம் சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க. அதுக்காக வருத்தப்பட முடியுமா? டைரக்டர் என்ன சொல்றாரோ அதைதான் பண்ண முடியும். நம்ம விருப்பத்துக்கு நடிக்க முடியாது. ஒரேமாதிரி ஸ்லாங் பேசறதுதான் என் ஸ்டைல். அதை மாத்த முடியாது.

நிறையபேர் போட்டிக்கு வந்துட்டாங்களே?

நான் யாரையும் போட்டியா நினைக்கிறது இல்லை. தனி குதிரை நான். இதுல, நம்பர் ஒன் நடிகனா இருக்க ஆசை. ஓடறப்ப, பின்னுக்கு வர்ற குதிரையை திரும்பி பார்த்தா, நான் ஓடறது லேட்டாயிடும். பிறகு கடைசியா நிற்பேன். ஓடிக்கிட்டே இருக்கணும். அதுதான் முக்கியம்.

ஸ்கூல் கட்ட போறீங்களாமே?

ஆமா. இது என் ரொம்பநாள் கனவு. பெரியகுளம் பக்கத்துல ஏழாம் வகுப்பு வரை படிக்கிற மாதிரி, தமிழ் பள்ளிக்கூடம் கட்ட திட்டம் இருக்கு. படிக்க வர்ற பசங்க கிட்ட காசு வாங்க மாட்டேன். எல்லாருக்கும் இலவச கல்வி. ஏழாவது முடிச்சவங்க, மத்த ஸ்கூலுக்கு போய் படிக்க சிபாரிசு பண்ணுவேன்.

Other also read:

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

எப்போது நிர்வாணமாவார் பூனம் பாண்டே?-கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்!

சித்தார்த்துடன் காதலா? – மழுப்பும் ஸ்ருதி

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! – சீமான்
காங்கிரஸ்  போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைகோ – அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என்று நேற்று இரவு கூறப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை, இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிவெடுத்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம் என திடீரென முடிவு செய்து, அதனை இன்று காலை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சென்னை பிரஸ் கிளப்பில் சந்தித்தார் இயக்குநர்  சீமான்.

அவர் கூறுகையில், ” இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.

தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள்  படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.

எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?

அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.

ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

அருமை அண்ணன் வைகோ, எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

“தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்” என்பதே இந்தத் தேர்தலில் எனது ஒரே பிரச்சாரம்.

உங்கள் பிரச்சாரம் எந்த அளவுக்கு காங்கிரஸை வீழ்த்த உதவும்?

அது எந்த அளவுக்கு பாதிப்பை முன்பு ஏற்படுத்தியது என்பதை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடித்துவிட்டு, மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஈழப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பிரச்சாரம் செய்வீர்களா…. இங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தத் தேர்தலில் ஈழத் தமிழினத்துக்கு இந்த காங்கிரஸ் இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் சொல்லப் போகிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016-ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப் போகும் நல்ல விஷயங்கள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து வைப்பேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து…

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்… எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு.

இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும்.

ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?”, என்றார் ஆவேசமாக.

Other also read:

விஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. யாருக்கு வாக்களிப்பதென ரசிகர்களுக்குத் தெரியும்! – எஸ்ஏ சந்திரசேகரன்!

தமன்னா… தமிழில் ஒண்ணே ஒண்ணு!!

ராணாவுடன் டேட்டிங்? – ஸ்ரேயா விளக்கம்