Pirapalam.Net » பாலிவுட்

அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு மாயாவதி அரசு அனுமதி மறுப்பு
அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துவிட்டது.

அமிதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரக்ஷான்’ இந்திப் படம் வெளியாக இருப்பதையொட்டி, அவரும் இயக்குநர் பிரகாஷ் ஜா, நடிகர் சைப் அலிகான், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் லக்னோ நகரில் இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரபிரதேச மாநில அரசு நேற்று மறுத்து விட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர் அமிதாப்பச்சன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க இருந்தார். அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

Other also read:

‘மயக்கம் என்ன’வாக மாறிய ‘இரண்டாம் உலகம்’!

’7ஆம் அறிவு’ விழாவில் சூர்யா சாகசம்!

194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்! லண்டனில் சத்தியராஜ் உணர்ச்சி முழக்கம்!

சீமானைக் கைவிட்டார் விஜய்?

முத்த சர்ச்சை: ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு சம்மன்
பொது இடத்தில் முத்தமிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு டெல்லியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் ரிச்சர்ட் கேர் ஷில்பாவை கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்தார். ஷில்பா என்னவோ சிரித்தபடி முத்தத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி பீகாரில் உள்ள சிவான் நகர நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஹரே ராம் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் ரிச்சர்ட் கேர் உள்ளிட்ட 5 பேர் வரும் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Other also read:

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

‘மங்காத்தா’ சிக்கல் விலகியது!

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

லாரா தத்தா 3 மாதம் கர்ப்பம்
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான லாரா தத்தா விரைவில் தாயாகவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை லாரா தத்தா பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி மணந்தார். இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே லாரா தத்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை லாரா மறுத்து வந்தார்.

இறுதியாக தற்போது தான் தான் தாயாகப் போகும் விஷயத்தை உறுதிபடுத்தியுள்ளார். கர்ப்பமாக இருப்பதால் லாரா நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் லாராவும், மகேஷ் பூபதியும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளனர்.

லாராவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாவது,

தான் தாயாகப் போகிறோம் என்று லாரா குதூகலமாக உள்ளார். குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் போட மாட்டார். லாரா தற்போது டான் 2 மற்றும் அவரது சொந்த தயாரிப்பில் நடித்து வருகிறார் என்றார்.

இது குறித்து லாரா, பூபூதியை தொடர்புகொண்டபோது அவர்கள் கூறியதாவது,

நாங்கள் இருவரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். புதிய வரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

வாழ்த்துக்கள் லாரா…

Other also read:

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

விஜய்க்கு மட்டும்தான்… மத்தவங்களுக்கு இல்ல! – அனுயா

ரஜினி படம் என்பதால் எப்போது அழைத்தாலும் வருவேன் – தீபிகா
எனக்கு என்னதான் கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும், ரஜினி சார் படத்துக்கு மட்டும் எப்போது அழைத்தாலும் வருவேன். எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான், என்றார் தீபிகா படுகோன்.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். இந்தப் படத்தில் ரஜினியின் மற்ற இரு வேடங்களுக்கு நாயகிகள் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் தீபிகா மட்டும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ரஜினி உடல்நிலை காரணமாக படத்தின் ஷூட்டிங் கேன்சலாகி, கால்ஷீட் பிரச்சினை வந்த பிறகும் கூட, தீபிகா பொறுமையிழக்கவில்லை.

ரஜினி எப்போது குணமாகி வருகிறாரோ அதுவரை காத்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

இப்போது மீண்டும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் நிலையில், அவரை ஷூட்டிங்குக்கு வருமாறு அழைத்துள்ளார் ரஜினி. இதுகுறித்து தீபிகா கூறுகையில், “ராணா ஷூட்டிங் குறித்து கேஎஸ் ரவிக்குமார் தகவல் அனுப்பியுள்ளார். எனக்கு இதை அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

காரணம் இது ரஜினி படம். அவர் எப்போது அழைத்தாலும் ராணா படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கிறேன். எனக்காக அவர்களை காத்திருக்க வைக்கவும் மாட்டேன். ராணாவுக்காக எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்”, என்று கூறினார்.

படப்பிடிப்பு துவங்கும் முன், ரஜினிக்காகவும் ராணா படம் சிறப்பாக வரவும் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளாராம் தீபிகா.

ஐட்டமா, வேண்டவே வேண்டாம்: பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு நான், நீ என போட்டி போட்டு ஆடிக் கொண்டிருக்கையில் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நாயகி பிரியங்கா சோப்ரா(28). பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டில்லாத படமே இல்லை எனலாம். இந்த குத்துப் பாட்டிற்கு குத்தாட்டம் போட முன்னணி நாயகிகள் எல்லாம் போட்டி போடுகின்றனர். அங்கு குத்துப் பாட்டு அவ்வளவு பிரபலம்.

இந்நிலையில் குத்துப் பாட்டே வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி குத்துப் பாட்டுக்கு ஆடும் எண்ணமே இல்லை என்கிறார் அவர்.

இதற்கிடையே அனில் கபூர், அஜய் தேவ்கன் மற்றும் கங்கனா ரனௌத் நடிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் தேஸ் படத்தில் பிரியங்கா ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து குத்தாட்டம் போடுவார் என்று பேசப்படுகிறது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரியங்காவின் செய்தித் தொடர்பாளர்.

எனினும் தீபாவளிக்கு வெளியாகும் ஷாருக் கானின் ரா ஒன் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் பிரியங்கா.

Other also read:

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

தயாரிப்பாளரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்த ஜெனிலியா!

ரஜினி நாளை சென்னை வருகை

என்னால் நல்ல கணவனாக இருக்க முடியாது: சல்மான் கான்
4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்துவிட்டேன், என்னால் நல்ல கணவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது என்று இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.

46 வயதாகும் சல்மான் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடன் அறிமுகமான ஷாருக் கான் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். அமீர் கான் முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

ஆனால், சல்மான் கான் ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், உள்ளிட்டோரை காதலித்தார்.

பின்னர் அந்தக் காதல்களும் தோல்வியில் முடிந்தன. இப்போது ஆசின், கங்கனா, சோனாக்ஷி ஆகியோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் சல்மான்.

மான் வேட்டை, அடிதடி, கோர்ட், சிறை வாழ்க்கை, மிரட்டல், மோதல் என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் சல்மான் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார். அனாதை இல்லங்களுக்கு இவர் பெருமளவில் உதவிகள் செய்து வருகிறார்.

ஆனாலும் அவருக்கு இதுவரை திருமணம் கைகூடவில்லை. இந் நிலையில் திருமணம் குறித்து சல்மான் கூறுகையில், நான் ரொம்ப கஷ்டமான பேர்வழி. என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. என் குணாதிசயம் அப்படி.

இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும் அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். ஆனால், அவர்களுடனான உறவைக் கூட என்னால் நீடிக்க முடியவில்லை.

என் காதல்கள் தோற்றதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறுகளால் தான் அவை முறிந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது.

இதனால் நான் திருமணத்தை பற்றி யோசிப்பதைக் கூட விட்டுவிட்டேன். இதனால் கல்யாணம் எப்போது என்று கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

அதே நேரத்தில் நான் இன்னும் காதலிப்பதை விட்டுவிடவில்லை… என் வயதில் பாதி வயதில் உள்ள சிலரை நான் இன்னும் காதலித்துக் கொண்டு தானே இருக்கிறேன் என்றார்.

Other also read:

சத்தமில்லாமல் ஒப்பந்தமான ஆர்யா!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

ஜூலை 21 முதல் ‘வேலாயுதம்’ பாடல்கள்

சினிமாவுக்கு முழுக்கு: ஷில்பா ஷெட்டி அறிவிப்பு
சினிமாவுக்கு ஒரு வழியாக “குட்பை” சொல்லியுள்ளார் ஷில்பா ஷெட்டி. இனி்மேல் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவர் ஷில்பா. திருமணத்திற்குப் பின்னர் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார்.

சினிமாவில் நடிக்க முன்பு போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஷில்பா மறுத்திருந்தார். இந்த நிலையில் நடிப்புக்கு “குட்பை” சொல்லியுள்ளார் ஷில்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது தான் நடிப்புக்கு “டாடா” சொல்ல சரியான நேரம். திருமணத்திற்குப் பின்னர் என்னால் பல பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் ஷில்பா. தற்போது தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷில்பா.

ஷில்பாவைத் தேடி நாயகி வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாம். குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கும், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கும் தான் நிறைய வாய்ப்பு வருகிறதாம். இப்போது சினிமாவை விட்டு முழுமையாக விலகி விட முடிவு செய்துள்ள ஷில்பா, ராஜஸ்தான் றோயல்ஸ் நிர்வாகத்திலும் தான் மேற்கொண்டு வரும் பிற தொழில்களிலும் முழுக் கவனத்தை செலுத்தப் போகிறாராம்.

Other also read:

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

இலியானாவின் நம்பிக்கை பலம் பெறுமா?

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

பிள்ளையார் தெரு கடைசிவீடு

‘மங்காத்தா’ ட்விட்டர் கலகல!

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஹீரோயின்’!
மதுர் பண்டர்கர் அடுத்து இயக்கப் போகும் ‘ஹீரோயின்’ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். அனேகமாக கேன்ஸ் திரைப்பட விழாவின்போது அது வெளியாகலாம் என்று தெரிகிறது. பண்டகர்கரும், யுடிவியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். ஒரு சினிமா நாயகியின் கதைதான் இப்படத்தின் கதையாகும். இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முழு விருப்பம் தெரிவித்துள்ளார். மிகவும் ஆர்வமாக உள்ளார் என்றும் பண்டர்கர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக கரீனா கபூரை இப்படத்தின் நாயகியாக்க அணுகினர். ஆனால் சில பல டிஸ்கஷன்களுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடபப்பட்டது. கரீனாதான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டார் என்று தெரிகிறது. இதையடுத்தே ஐஸ்வர்யாவை அணுகி ஒப்பந்தம் செய்துள்ளார் பண்டர்கர்.

Other also read:

பகலவன்…விஜய்க்குக் கதை சொல்லத் தயாராகும் சீமான்!

தமிழ்சினிமாவில் நிர்வாணம் ரசிகர்களுக்கு இரு வார அதிர்ச்சி??

சன்னுக்கு டாட்டா காட்டிய அவன் இவன்!

3 வேடங்களில் சோனியா அகர்வால்

என் தந்தை நலமுடன் இருக்கிறார்; யாரும் பயப்படவேண்டாம்: சவுந்தர்யா

நீச்சல் உடையா? அசின் மறுப்பு
அசின் கூறியது: பாலிவுட் போட்டி நிறைந்த உலகம். என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன் போட்டியில் ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற ஹீரோயின்கள் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதில் கூட அக்கறை கிடையாது. எனக்கு ஸ்கிரிப்ட், தயாரிப்பு நிறுவனம்தான் முக்கியம். பின்னர் ஹீரோ. இந்த பாலிசியுடன்தான் எனது படங்களை தேர்வு செய்கிறேன். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. சில காரணங்களால் ஏற்கவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. சில ஐ.பி.எல் டீமில் என்னை தூதராக இருக்கக் கேட்டார்கள். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஆனால் தூதராக இருக்க விரும்பவில்லை. அதற்கும் காரணங்கள் இருக்கிறது. ஒரு படம் ஒப்புக்கொள்ளும்போது அதில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று முக்கியமாக பார்க்கிறேன். ஹீரோவின் கைப்பாவையாக மட்டுமே வந்துபோக விரும்பவில்லை. மணிரத்னம், பிரியதர்ஷன், ராஜ்குமார் ஹிரானி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை. சமீபகாலமாக நான் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. நிச்சயமாக அப்படி நடிக்க மாட்டேன்.

Other also read:

“விஜய் நடிக்கும் வேலாயுதம் புகைப்படங்கள்”

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்தவன் நான்தான்!

14 தேசிய விருதுகளை வாரிச் சுருட்டிய தமிழ்!

ரஜினி விரைவில் மீண்டு வருவார்! – வைரமுத்து

ரஜினி வெளிநாட்டுக்கு செல்கிறாரா?

நடிகை மல்லிகா ஷெராவத்தை கொல்ல சதி செய்தவர் கைது!
பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய பழைய குற்றவாளி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் செய்துவந்த ஒருவரை தீர்த்துக்கட்ட அவர்கள் இருவரும் திட்டமிட்டிருந்தனர். இதுபற்றிய ரகசிய தகவலின் பேரில், டெல்லி போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

Other also read:

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா – இலியானா – தபு!!

“விஜய் நடிக்கும் வேலாயுதம் புகைப்படங்கள்”

ரஞ்சனியை கரம்பிடிக்கிறார் நடிகர் கார்த்தி

விஜய் வீட்டை தாக்கியது யார்?

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா