Pirapalam.Net » திரைவிமர்சனம்

முதல் இடம்
ஒரு லோக்கல் ரவுடி கிரிமினல் பட்டியலில் முதல் இடத்தில் வரத் துடிக்கும் கதை.

முதல் மாணவனாக தேர்ச்சி பெற வேண்டும், பெரிய டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண்டும் இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும்

ஒவ்வொரு விதமான ஆசைகள் லட்சியங்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் வரும் நாயகன் விதார்த்துக்கு காவல்நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் தனது பெயர் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. இதற்காக முதலில் சின்னச்சின்ன தவறுகளை செய்து வரும் விதார்த், ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரவுடியையே கொலை செய்து விட்டு அந்த இடத்துக்கு வரத்துடிக்கிறார். இதற்கிடையில் பள்ளி மாணவி ஒருத்தியுடன் காதல் வேறு வந்து தொலைக்கிறது. அவளோ ரவுடியிசத்தை தூக்கிப் போட்டு விட்டு வரச் சொல்கிறாள். அதே நேரத்தில் அவன் எதிரி ரவுடிகள் அவனை கொல்வதற்கு திட்டம் போடுகின்றனர். தன் உயிரைக் காப்பாற்றுவதா? இல்லை தான் காதலித்த பெண்ணுடன் வாழ்வதா? என்னும் போராட்டத்தில விதார்த் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு அவளோடு சேர்ந்தானா? இல்லையா? என்பதுதான் கதை.

படத்தின் டைட்டில் ‘முதல் இடம்’ என்று வந்ததும் அடடா… தெரியாம ஏவிஎம்மின் டிவி சீரியல் எதையோ போட போறாங்க போலிருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு டைட்டிலில் ஒரு எளிமை(?) கிராபிக்ஸ் உலகம் எங்கயோ போயிருச்சு. ‘சிவாஜி’ படம் எடுத்த ஏவிஎம்முக்கு இது கூடவா தெரியாம போச்சு. டைட்டில்தான் அப்படி என்றால், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் டிவி சீரியல்தான் படம் என்பதை சத்தியம் செய்யாத குறையாக நிரூபிக்கின்றன.

ஊரில் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டு திரியும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எமன்குஞ்சுவாக வரும் விதார்த். வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, சட்டை காலறை தூக்கி விட்டுக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் கோபம் வரவைப்பதாகவும், பல நேரங்களில் காமெடியாகவும் இருக்கிறது.

கதாநாயகி கவிதா நாயரின் முகம் முத்தினதாய் பல காட்சிகளில் அக்கா போலிருக்கிறார். கண்கள் சில இடங்களில் க்யூட். கூட வரும் ப்ரெண்ட் கேரக்டரையெல்லாம் நல்லா தேடிப் போடுகிற இயக்குநர் கதாநாயகி விஷயத்தில் சறுக்கியிருப்பது ஏன் என்றே தெரியவில்லை?.

எமன்குஞ்சுக்கு விதார்த் தரும் விளக்கம்… அப்பப்பா… இயக்குநர் இதுக்கு ரூம் போட்டு யோசிச்சிருப்பாரு போலிருக்கு. ரவுடியை பள்ளி மாணவி விரும்புவது போல் காட்டியிருப்பது எல்லாம் பல படங்களில் பார்த்த சலிப்பூட்டும் காட்சிகள்தான்.

கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார் இளவரசு. இவர் மகளுக்கு இவரிடமே எல்லாரும் லவ்லெட்டர் கொடுக்க அதற்கு இவர் கொடுக்கிற விளக்கம் இருக்கே அடடடா… நல்ல குடும்பம்டா இதுன்னு சொல்ல வைக்கிறது.

மயில்சாமி ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கலைராணி வழக்கமாய் கத்தி கத்தி அழுகிறார். படம் பூராவும் மகன் செய்யும் தவறுக்கெல்லாம் உடைந்தையாய் ஆதரவு அளித்துவிட்டு, இறுதிக்காட்சியின் போது வில்லன் திருந்துவது போல மகன் மீது பாசத்தை பொழிந்து, அவனை திருந்தச் சொல்லி அழுவது செம காமெடி. எதிர்கோஷ்டி வில்லனை வைத்து தருகிற ட்விஸ்ட் ஓகே.

இவர்கள் எல்லோரையும் விட ரவுடி பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கும் கிஷோர்தான் நிமிர்ந்து நிற்கிறார். தெரியாம அரிவாளை கையில எடுத்துட்டேன், இப்ப அதை எப்படி கீழே போடுறதுன்னு தெரியல என்று பேசும் வசனங்களில் கதையின் முதுகெலும்பாக இருக்கிறார். தன் இடத்தை பிடிப்பதற்காக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் விதார்த் செய்த கொலையை தான் ஏற்று ஜெயிலுக்கு செல்லும் கிஷோரின் கேரக்டர் டச்.

செல்லத்துரையின் ஒளிப்பதிவு பளிச். டி.இமானின் இசையில் இரண்டு குத்துபாடல்கள் ஓகே. அப்புறம் ‘வாந்தே போந்தே….’ என்ற அறிவுமதியின் பாடல் கொஞ்சமே கொஞ்சம் மெலடி. ‘ஊரு ஊரு தஞ்சாவூரு…’ என்ற குத்துப்பாடலுக்கு ஆடும் கீர்த்தி சாவ்லா, ஜொள்ளு பிரியர்களின் வாயில் எச்சில் ஊற வைத்து விடுகிறார்.

‘பருத்திவீரன்’ டைப் ரவுடிக்கதை, ‘களவாணி’ டைப் காட்சிகள், ‘சுப்ரமணியபுரம்’ போன்ற நட்பு, துரோகம், கொலை, என்று நிறைய வைத்து ஒரு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஆர்.குமரன். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இவ்வளவு பளிச்சென்ற ரவுடியை தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு முன்னால்தான் காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் குட்டி குட்டி ட்விஸ்டுகள், சில வசனங்கள் அட போட வைத்தாலும், ஹீரோ கேரக்டர் முதல் வில்லன் கேரக்டர் வரை ஒரு குழப்பமான மனநிலை இருப்பதால் ஒன்றும் ஏற மாட்டேன் என்கிறது.

முடிவாக, குற்றவாளி பட்டியலில் முதலிடம் பிடிக்க போராடிய விதார்த்தின் மகன் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதை சொல்லி, இதுதான் உண்மையான முதல் இடம் என்று உணர்த்தும் காட்சியில் இயக்குநர் முத்திரை பதித்திருக்கிறார்.

முதல் இடம் – சிறந்த சீரியல்!

நடிகர்கள்

விதார்த், கவிதா நாயர், கிஷோர், ‘களவாணி’ திருமுருகன், அப்புக்குட்டி, இளவரசு, மயில்சாமி, கலைராணி, மனோபாலா, பொன்னம்பலம், கீர்த்தி சாவ்லா

இசை

டி.இமான்

இயக்கம்

ஆர்.குமரன்

தயாரிப்பு

எம்.சரவணன், எம்.எஸ்.குகன்

Other also read:

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

விக்ரமின் கரிகாலன்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
வயது கோளாரால் ஏற்படும் காதல், அந்த காதலினால் உண்டாகும் கலவரம், இந்த கலவரத்திற்கு இறையாகும் இரண்டு உயிர்கள் என மனிதர்களால் பிரிக்கப்படும் காதலர்களை, காலம் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதுதான் கதை.

பள்ளிப்பருவக்காதலை ‘வைகாசி பொறந்தாச்சு’, ‘அழகி, ‘ஆட்டோகிராப்’, மாதிரி நேர்த்தியான திரைக்கதையில் சொன்னவர்களும் உண்டு. லாஜிக் கோளாறுகளால் சொதப்பியவர்களும் உண்டு. முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால் வெற்றியை மயிரிழையில் தவற விட்டுட்டார் அறிமுக இயக்குநர் ஏகாதசி.

பள்ளி காலத்தில் காதல் கொள்ளும் தேஜ்-கீத்திகா ஜோடியின் காதல் ஊர் பிரச்சினையால் உடைகிறது. வெவ்வேறு கிராமங்களைச் சார்ந்த இவர்களது காதல், இரண்டு கிராமத்திற்கும் இடையே ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணி கொடுப்பேன், அந்த ஊர்க்காரனுக்கு மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கீத்திகாவின் தாய் மாமன் மல்லுக்கட்ட, அவருக்கு போட்டியாக கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அவனோடுதான் என்று தனது மாமாவை எதிர்க்கிறார் கீத்திகா. இப்படி காதலுக்காக போராடும் கீத்திகா, பஞ்சாயத்தில் தான் தேஜ்ஜை காதலிக்கவில்லை என்று திடீர் பல்டியடிக்க, மனமுடைந்த ஹீரோ சென்னைக்கு புறப்பட, சென்னையில் வசிக்கும் ஏகாதசியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்கிறார் கீத்திகா.

காதலில் பிரிந்த இவர்கள் சென்னையில் பக்கத்து பக்கத்து குடியிருப்பில் வசிக்க நேரிட்டாலும், தங்களை ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் கீத்திகாவின் இளம் வயது காதலன் தேஜ் என்பது ஏகாதசிக்கு தெரிய வர கொடுமைகளுக்கு ஆளாகும் கீத்திகா இறுதியில் என்ன ஆனார் என்பதுதான் மீதிக்கதை.

எட்டு வருடங்களுக்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கிய ‘அழகி’ படத்தின் சாயலை ஒத்திருக்கிறது படம். ஆனால் நகரமயமாதலில் முற்றிலும் சிக்கிவிடாத இடைநிலைக் கிராமங்களின் மனோநிலையை, நகல் எடுத்துக்காட்டிய வகையில் வேறுபட்டு நிற்கிறது படம். தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரும் நாகரிக வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலை இல்லாத ஒரு பழைய தலைமுறை… படித்து விட்டு மாநகரத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் இளையதலைமுறை… இந்த இரண்டு துருவங்களுக்கு மத்தியில் பயணப்பட்டிருக்கிறது கதை.

நாயகன் தேஜுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கதாநாயகி கீத்திகாவுக்கு அழகு கம்மியென்றாலும் நடிப்பு ஜாஸ்தி. ஒரு அரக்கனை கட்டிக்கொண்டு அவ்வளவு அமைதியாக இருக்கும் அவர், இறுதிக்காட்சியில் சாமி வந்ததை போல சிலிர்த்துக் கொண்டு கிளம்புகையில் நமக்கே அச்சம் வருகிறது.

முறை மாமனாக நடித்திருக்கும் அந்த சிங்கப்பூர் துரைராஜ், பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கிறார். அவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு ஒரே ஒரு வாத்தியார். அதுவும் மனோபாலா. சொல்லவே வேண்டாம்… சுத்தமாக எடுபடவேயில்லை. குத்தாட்டம் போட்டிருக்கிறார் சுஜிபாலா.

படத்தின் எதிர்மறையான அழகியலோடு வந்து நிற்கிறது ஏகாதசியின் கதாபாத்திரம். (இயக்குநரே நடிச்சு சும்மா அதகளம்பண்றாருங்கோ) சென்னை மாநகராட்சியின் கட்டணக் கழிவறை ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பவன். குறைவான கட்டணம் செலுத்தி கழிவறைக்குள் போய்வந்தவன் பொய் சொல்கிறான் என்பதை, அவன் கையை முகர்ந்து பார்த்துக் கண்டுபிடிக்கத் தயங்காதவன். யதாத்தத்திற்கு மிக அருகில் நிற்கும் ஒரு சாதாரணனின் இந்தக் கதாபாத்திரம் தமிழ்சினிமாவுக்கு புதுசு! தூக்கிக் கட்டிய வேட்டி, கழுத்தில் துண்டு என்று இவரின் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். மொத்தத்தில் ஒரு ஹீரோவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் ஏகாதசி!

படத்தில் மிகச்சிறந்த பகுதி என்றால், கிராமத்தில் இளம்பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டால் அதற்கான உண்மையான காரணத்தை உணர மறந்து, பேய் பிடித்திருப்பதாக நினைத்து, பூசாரியைக் கொண்டு உடுக்கடிப்பதும், மந்தரிப்பதும் எத்தனை முட்டாள்தனமான மூட நம்பிக்கை என்பதை, இறுதிக்காட்சியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குநரே எழுதியிருக்கிறார். ‘உசுர திருடிப் போறா…’ பாடல் அழகான தாலாட்டு. பின்னணி இசையிலும், பாடல்கள் இசையிலும் கிராமத்தையும், கிராமியத்தையும் நம் கண்முன் நிறுத்தும் பரணியும், ‘மைனா’ புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தின் பலம்!

சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அரிவாளால் வெட்டிக் கொள்ளும் கதைக்களத்தை பாரதிராஜா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால், வட்டி கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒருவனின் சின்னவிஷயம் எப்படி ஊர்ப்பகையாக உருவெடுக்கிறது என்பதை, நுணுக்கமாகச் சித்தரித்திருக்கும் அறிமுக இயக்குநர் ஏகாதசி, கொஞ்சம் முயன்றால் இன்னும் நல்ல படங்களை தரமுடியும்.

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை – கொஞ்சம் சுவாரஸ்யம் கொஞ்சம் சொதப்பல்!

நடிகர்கள்

தேஜ், கீத்திகா, ஏகாதசி, ‘பசங்க’ செந்தில்குமாரி, மனோபாலா, சுஜிபாலா

இசை

பரணி

இயக்கம்

ஏகாதசி

தயாரிப்பு

துவார் ஜி.சந்திரசேகரன்

Other also read:

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

சினேகாவின் கலக்கல் கவர்ச்சி!

ரௌத்திரம்

ரௌத்திரம்
பிறருக்கு துன்பமெனில் ‘ரௌத்திரம்’ பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.

சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா. ஸ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி முதல்வரிடமும், போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஸ்ரேயா. அவன் பிரபல ரௌடி ‘கௌரி’க்கு வேண்டப்பட்டவன் என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும் சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு வந்துவிழுகிறான்…. ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப் பார்த்து காதல் கொள்கிறார் ஸ்ரேயா.

ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும் கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத் ‘தட்டி’க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும் பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்தி விடுகிறார். கௌரி குழுவினரின் கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்!!

படத்தில் உண்மையான ஹீரோ யாரென்றால் அது அனல் அரசுதான். அருமையாய் கோரியோகிராப் செய்யப்பட்ட சண்டைக்காட்சிகள். நிஜமாகவே இன்னவோட்டிவ் அண்ட் இண்ட்ரஸ்டிங். சண்டைக் காட்சிகளை எக்ஸிக்யூட் செய்த விதத்தில் அசத்தல். அதற்கு பிறகுதான் எல்லோரும். குறையாய் சொல்லப் போனால் சில இடங்களில் அந்த ஸ்லோமோஷன் ஆக்ஷன் சீன்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஐந்து நிமிடமே வரும் பிரகாஷ்ராஜ் எபிசோட் அட்டகாசம். அதற்கு காரணம் பிரகாஷ்ராஜின் பாடி லேங்குவேஜும், அதை படமாக்கிய விதமும் நம்ப வைக்கிறது.

ஜீவாவிற்கு ‘சத்யா’ போல ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆரம்ப காட்சிகளுக்கு அப்புறம் ஒரு கீறல்கூட படாமல் தொடர்ந்து எல்லாரையும் பந்தாடிக் கொண்டேயிருப்பதை நம்ப முடியவில்லை. அதற்கான பாடி லேங்குவேஜும், நடிப்பும் குறையே. ஆக்ஷன் ஹீரோ வரிசையில் சேர்க்க வேண்டிய தகுதிகளை இப்படத்தில் காட்டியிருக்கிறார். வழக்கமாய் கலகலவென பேசியே பார்த்த ஜீவா இதில் கொஞ்சம் பேசாத ஜீவாவாக போரடிக்கவே செய்கிறார். தொடர்ந்து இவரை கொல்ல முயல்வதே ஒரு கதையாய் போனவுடன் ஆரம்பித்த சுறுசுறுப்பு சுர்ரென இறங்கிவிடுகிறது.

ஸ்ரேயாவுக்கு கொடுத்த காசுக்கு உருப்படியான கேரக்டர். வழக்கமாய் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர் போலில்லாம கொஞ்சம் யோசிக்கும்படியான கேரக்டரை கொடுத்த இயக்குநருக்கு ஒரு பெரிய கும்பிடே போடலாம். ஸ்ரேயா, ஜீவாவின் காதலியாக வருகிறார். “நாங்க தனியா இருக்கும் போதுகூட அவன் என்னை கிஸ் பண்ணினது இல்ல, காதலர் தினத்தன்னிக்கு பார்வர்ட் மெஸேஜ்கூட அனுப்பினதில்ல. இதே மாதிரிதான் என்னை தவிர அவன் வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். அதான் என் சிவா” என ஜீவாவிற்கு தன் தோழியிடம் நற்சான்றிதழ் தரும் காட்சியில் ஸ்ரேயா அழகோ அழகு. தோழிக்காக தன் தந்தையிடம் கெஞ்சுவதும், கோபத்தால் சீறுவதும், நன்றாகவே நடித்திருக்கிறார். ஜீவா-ஸ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம்.

கிட்டுவாக வரும் அந்த மகாகுண்டு கணேஷ் ஆச்சார்யா, கவுன்சிலர், கௌரியின் அல்லக்கை, இன்னொரு லோக்கல் அல்லக்கை ரவுடியாக வரும் இயக்குநர் கோகுல், பக்கா லோக்கல் பாஷை பேசும் எம்.எல்.ஏ என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். எல்லா கேரக்டர்களும் வரும் போது பெரிய பில்டப்போடு தான் வருகிறார்கள் முடியும் போது பொசுக், பொசுக்கென வீழ்ந்துவிடுகிறார்கள்.

பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். ‘இன்னா பெரியா பயிப்பாநீ…’ என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர்தான் பிரதான ரௌடி ‘கௌரி’.

ஜீவாவின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஜீவாவிற்கும் அவரது தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நம் வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை காட்டுகின்றன. ஸ்ரீநாத், சத்யன் ஆகிய இருவரும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் கோகுல், முதல் படத்திற்கு நல்ல அவுட்புட்தான் என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் அப்படியே தொங்கிப் போய் சரிடா இப்ப அவனை கொல்லப் போறீங்களா? இல்லியான்னு புலம்ப வைத்துவிடுகிற அளவுக்கு டிராகிங்காக போனதுதான் பெரிய மைனஸ். குடும்ப சம்மந்தப்பட்ட காட்சிகளில் கிடைக்கும் சுவாரஸ்யம் பின் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் இல்லாம போய்விடுகிறது. கௌரி.. கௌரி என்று ஆளாளுக்கு சொல்லும் போது நடு முதுகில் சில்லென ஏற வேண்டும் என்கிற அளவுக்கு முதல் பாதியில் பில்டப் செய்தவர்கள். அதற்கான கரெக்டான காஸ்டிங்கை செய்திருந்தால் இன்னும் ஏறியிருக்கும் சூடு.

இயக்குநரைப் போன்றே ஒளிப்பதிவாளர் என்.ஷண்முக சுந்திரத்திற்கும் அறிமுகப் படம் இது. பிரகாஷ்ராஜின் சண்டை, வில்லன் கௌரியை அறிமுகப்படுத்தும் காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள், ஸ்ரேயாவும், ஜீவாவும் பாலத்தில் நடந்து வரும் காட்சி என்று பல காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு நம்மை மிரள வைக்கிறது. ஜீவா, ஸ்ரேயா காதல் காட்சிகளை கவிதை போல படம்பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமராவும் பம்பரமாய் சுழன்றிருக்கிறது. கண்டிப்பாக இவர் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பார் எனலாம்.

இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கிக்கும் இது முதல் படம். படத்திற்கு பாடல்கள் பலம் சேர்க்கவில்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘மாலை மங்கும் நேரம்’ பாடல் மட்டும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதன் குணதேவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

குட்டி குட்டியாய் நிறைய வேலைகளை இயக்குநர் செய்திருக்கிறார். கௌரியின் ஆட்கள், அந்த கவுன்சிலர், எம்.எல்.ஏ, எதிர் கோஷ்டி கிட்டு, அவனது ஆட்கள், இவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் எல்லாம் படு நேச்சுரல். படம் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட வில்லன்களை காட்டியதில் எவனோடு தான் ஜீவாவுக்கு பிரச்சினை என்று மழுங்கி போகும் அளவிற்கு ஒரே வில்லன் கோஷ்டியாய் இருப்பது ஒரு மைனஸே.

ரௌத்திரம் – பழகிட்டான்!

நடிகர்கள்

ஜீவா, ஸ்ரேயா, கௌரி, சத்யன், ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், கணேஷ் ஆச்சார்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத்

இசை

பிரகாஷ் நிக்கி

இயக்கம்

கோகுல்

தயாரிப்பு

ஆர்.பி. சௌத்ரி

Other also read:

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

அஜித்துடன் ‘மங்காத்தா’ விளையாட ஆசையா?

இன்று ‘ரஜினிகாந்த்’ பிறந்த நாள்?

அமைதி தான் உலகின் மிகச் சிறந்த ஆயுதம்: ஜீவா

கருங்காலி
இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.

பொறுக்கி, பெண் பித்தன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சேரிப்பகுதியில் அனாதைகளோடு

அனாதையாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு கஞ்சாபேர்வழியின் கையில் அந்த சிறுவர் கூட்டமே சிக்குகிறது. அவனிடம் கஞ்சா பொட்டலம் விற்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கொலைகாரனாகவும் மாறுகிறார். அதோடு பெண்களை அனுபவிக்க வேண்டும்; ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பெரிய பெண் பித்தனாகவும் இருக்கிறார். தனது கூட்டத்தில் வளரும் அஸ்மிதாவுடன் கணவன்-மனைவி போன்று வாழ்பவர் அவள் வயிற்றில் தனது குழந்தை வளர்கிறது என்பது தெரிந்ததும் அவளை சுட்டுக் கொல்கிறார் களஞ்சியம். அப்படிப்பட்டதொரு மிருக குணம் கொண்ட கேரக்டர்.

அதன்பிறகு சாலையில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு டாக்டர் பெண்ணின்(சுனிதா வர்மா) அழகில் மயங்கி அவளை இவர் காப்பாத்துகிறார். ஆனால் அந்த பெண்ணே இவரை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறாள். இதனால் அவளுக்கு கணவனாகி சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கும் களஞ்சியம், குழந்தையின்மை காரணமாக மனைவியிடம் சிகிச்சைக்கு வரும் அஞ்சலியை அனுபவிப்பதற்காக தொடர்கிறார். இதற்காக சில நாடகங்களை நடத்துகிறார். களஞ்சியத்தின் காமப் பிடிக்குள் அஞ்சலி சிக்கினாரா? இல்லை தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ரவியாக நடித்த இயக்குநர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் சுத்தமாக எடுபடவில்லை.

அஞ்சலியின் கணவனாக வரும் சீனிவாசன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிப்பு நன்றாக உள்ளது.

அஞ்சலி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நடிப்பில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக தனது சொந்த குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். நடிப்பில் பலபடி உயர்ந்து நிற்கிறார். சுனிதா வர்மாவை அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட சேரிப்பெண்ணாக வந்து களஞ்சியத்தையே சுற்றி சுற்றி வரும் அஸ்மிதாவின் கேரக்டர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிழலாடுகிறது.

பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு போன்ற வெற்றி படங்களை தந்த மு.களஞ்சியம் முதல் முறையாக கதை நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம். பூமணி படத்தின் திரைக்கதை இன்னும் அப்படியே கண் முன்னே இருக்கிறது பதினைந்து வருடங்களுக்கு பிறகும் அந்த கதையை மறக்க முடியாது அப்படி ஒரு படம். ஆனால் பூமணி உடன் ஒப்பிடும் போது கருங்காலியின் திரைக்கதைக்கு களஞ்சியம் மெனக்கெடவில்லை என தெரிகிறது.

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, களஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வளவு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம்.

அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், ‘தெய்வத்திருமகள்’ கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள்.

ஏராளமான லாஜிக் மீறல்கள், எதையோ சொல்ல நினைத்து எங்கோ கதை சுற்றுகிறது, கடைசி இருபது நிமிடத்தில் மட்டும் விறுவிறுப்பாக உள்ளது, அந்த விறுவிறுப்பை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

கருங்காலி – கண்றாவி

நடிகர்கள்

மு.களஞ்சியம், சீனிவாசன், அஞ்சலி, அஸ்மிதா, சுனிதா வர்மா, அலெக்ஸ், பொன்முடி

இசை

ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம்

மு.களஞ்சியம்

தயாரிப்பு

ஜி.விவேகானந்தன்

Other also read:

முதல் இடம்

’7ஆம் அறிவு’ விழாவில் சூர்யா சாகசம்!

லாரா தத்தா 3 மாதம் கர்ப்பம்

வெப்பம்
சிறு வயதிலேயே தாயை இழந்த அண்ணன்-தம்பி கதை.

மாமா வேலை பார்க்கும் ஊதாரி அப்பா, நோயின் பிடியில் இருக்கும் அம்மா, இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள். அம்மாவை நோயின் பிடியிலிருந்து விடுவிக்க அம்மாவுக்கு விஷம் கொடுக்கும் மூத்த மகன், அம்மா இறப்புக்கு பிறகு வேறொருவர் அரவணைப்பில் வாழும் இருவரும் வளர்வது, காதல், நட்பு இது போன்ற விசயங்கள் தான் படத்தின் கதை.

அமெரிக்க மாப்பிள்ளையாகவே பார்க்கப்பட்ட கார்த்திக்குமாருக்கு இதில் வித்தியாசமான வேடம். நன்றாக செய்திருக்கிறார் ஆனால் அவருக்கும் இதே எண்ணம் இருந்திருக்கும் போலும். அமெரிக்க மாப்பிள்ளை போல் இருக்கக்கூடாது என்று நினைத்து, சில இடங்களில் ஓவர் ஆக்ட் செய்திருக்கிறார்.

நித்யாமேனன் இயற்கையான அழகு, நடிப்பும் அருமை. இவருக்கு நல்ல படங்கள் அமைந்தால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ஆனால் முகத்தில், பேச்சில் தாண்டவமாடும் ஹைடெக், இப்படத்தின் சேரி கதாபாத்திரத்தில் உறுத்துகிறது.

பிந்து மாதவி அந்த மாதிரி பெண்ணாக வந்தாலும் நல்ல காதலுக்காக ஏங்குபவராக நடிக்கிறார். ஆனால் அவர் காதலனிடம்கூட உதட்டை கடித்து மடக்கி, கண்ணை ஒரு மாதிரி பண்ணி ஏன் அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்துகிறார்னு புரியல… அனா அவரோட அங்க லட்சணம், வளைவுகள் அழகு.

நானி நன்றாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், நன்றாக நடிக்கிறார்கள். ஆனால் கதாபாத்திரங்கள் வடிவமைப்புதான் கொஞ்சம் சரியில்லாதது போல் தோன்றுகிறது. ஒரு நிமிடத்தில் மக்கள் நெஞ்சங்களை கொள்ளையடிக்கும் விளம்பர பட இயக்குநரான அஞ்சனா,(கௌதம் மேனனின் உதவியாளர்) இரண்டு மணி நேர கதை சொல்லுக்கு இன்னும் பழக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. திரைக்கதையும் மிகவும் பலவீனம்.

படம் குப்பத்தை கதைக் களமாகக் கொண்டுள்ளது என்பதை முதல் காட்சியிலேயே புரிய வைக்கும் இயக்குநர், படத்தின் முதல் பத்து நிமிடங்கள்கூட கதாபாத்திரங்களை சென்னை பாஷை பேசவைக்கவில்லை. ஹீரோ, காதலியை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து மீட்டு வருவதற்காகத்தான் கடத்தல் தொழில் செய்யறான் என்பதையும் தெளிவாக சொல்லவில்லை.

ஹீரோக்கள் 2 பேரையும் காட்டும்போது ஒண்ணா அவங்க தண்ணி அடிக்கறாங்க, இல்லை தம் அடிக்கறாங்க. 2 பேருக்கும் வேற வேலையே கிடையாதா? (ஒரு பெண் இயக்குநர்கூட அப்படி எடுக்கணுமா?)

அழுகின்ற காதலியின் கண்ணீ­ரை தன் உதடு ஒத்தடத்தால் துடைக்கும் காதலன், அதை படமாக்கிய விதம் சூப்பர்! படத்தின் தன்மையை கருதி தேவையற்ற காமெடி டிராக் சேர்க்காமல் விட்டது இயக்குநரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் ‘மழை வரும்’, ‘மழைத்துளி எனது விழிகளில் தெரியுதே’ என்ற பாடல்கள் காதலர்களிடமும், ‘ஏய் ராணி நான் மகாராணி நீ தான் என் அடிமை’ என்ற குத்துப்பாடல் இளைஞர்களிடமும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற பாடல்கள் பின்னணி இசை எல்லாம் சுமார் ரகம்தான்.

ஓபனிங்க் ஷாட்ல ஏரியல் வியூல ஹீரோயின் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கற மாதிரி பில்டப்பு.. நல்ல ஒளிப்பதிவு. ஆனா கடைசில பார்த்தா கஞ்சா பொட்டணத்தை கரைக்கவாம்.. அந்த அரைக்கிலோ கஞ்சாவை கடற்கரைல கரைச்சா கரையாதா? மெனக்கெட்டு கடல்ல அரை கிலோ மீட்டர் போகணுமா? பாடல் காட்சியில் சந்து பொந்துகளுக்குள் ஓடும் காட்சியில் சொல்லிக்கொள்கிற மாதிரி கேமரா ஓடியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு பாராட்டுகள்!

நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் அதை திரைக்கதையாக்கும் விதத்தில் அஞ்சனா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருந்தால் வெப்பம் இன்னும் அனல் மூட்டியிருக்கும்.

வெப்பம் – புழுக்கம்!

நடிகர்கள்

கார்த்திக்குமார், நானி, நித்யா மேனன், பிந்து மாதவி, முத்துக்குமார்

இசை

ஜோஸ்வா ஸ்ரீதர்

இயக்கம்

அஞ்சனா

தயாரிப்பு

கௌதம் வாசுதேவ் மேனன்

Other also read:

நான் இன்னும் சின்ன பொண்ணு தான்: தமன்னா

லாரா தத்தா 3 மாதம் கர்ப்பம்

காஞ்சனா

காஞ்சனா
தன்னை கொலை செய்தவர்களை பழிவாங்க வேறு ஒரு உடலில் புகுந்து பழிவாங்கும் பேய் கதை.

‘முனி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. அதில் ராஜ்கிரண், இதில் சரத்குமார். ஆனாலும் முதல் பாகத்தைவிட டபுள் ஸ்பீடில் பறக்கிறாள் இந்த ‘காஞ்சனா’.

பத்து பேரை புரட்டி எடுக்கும் வீரனாக திகழும் லாரன்ஸ், 6 மணி என்றால் வெளியே போகாமல் வீட்டுக்கு போய் விடுவார். வீட்டிலேயும் தனது அம்மாவுடன்தான் படுப்பார். ஏன் பாத்ரூம் போக வேண்டும் என்றால்கூட தனது அம்மாவை துணைக்கு அழைத்துச் செல்லும் பயந்தாகோளியாகிவிடுவார். எல்லாம் பேய் பயம்தான். இப்படி பேய்க்காக பயப்படும் லாரன்ஸ் நண்பர்களுடன் ஒரு காலி வீட்டு மனையில் கிரிக்கெட் விளையாடச் செல்ல, அங்கேதான் ஆரம்பிக்கிறது பேயின் அட்டகாசம். ஏற்கனவே மூன்று பேரை கொலை செய்து அந்த வீட்டு மனையில் புதைத்திருக்க, அந்த மூன்று ஆவிகளும் லாரன்ஸ் உடலில் ஏறிக்கொள்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

லாரன்ஸ் வழக்கப்படி நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ரஜினியை இமிடேட் செய்கிறார். லட்சுமிராயுடன் சல்லாபிக்கிறார். டபுள் மீனிங்கிலும், சிங்கிள் மீனிங்கிலும் அம்மா, அண்ணன், அண்ணி, என்று மொத்த குடும்பமே பேசிக்கொள்கிறது. அம்மா பக்கா கோவை பாஷை பேசுகிறார். அண்ணி அய்யராத்து பாஷை பேசி சிக்கன் சமைத்து போடுகிறார். அண்ணன் சாதாரண தமிழ் பேசுகிறார். என்ன எழவுக்கென்றே தெரியவில்லை. முதல் பாதி முழுவதும் தேவையில்லாத சண்டைக் காட்சிகள், குத்து பாட்டுகள் என்று போனாலும், பேய் மேட்டர் ஆரம்பித்ததும் கொஞ்சம் சுறுசுறுப்படையத்தான் வைக்கிறார் லாரன்ஸ்.

படத்தில் சரியான எண்டர்டெயினர் என்றால் அது கோவை சரளாதான். இவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் அத்தனை அப்ளாஸ். அதுவும் சாமியாரிடம் ‘இது ரொம்ப டிஃபிகல்ட்டா இருக்கு சாமி’ என்று சொல்லுகையில் வெடிச்சிரிப்பு எழுகிறது.. பேய் இந்தியில் சம்ஜே என்று கேட்க, அதுக்கு இவர் சமஞ்சிட்டேன் என்று சொல்லுமிடத்தில் சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது.. கோவைசரளாவிற்கு சரியான பக்கவாத்தியமாக சேர்ந்து சிரிக்க வைக்கிறார் தேவதர்ஷினியும்.. ஸ்ரீமன் பேய் வரும்போதெல்லாம் வாயை கோணியபடியே படுத்துக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அக்மார்க் சிரிப்புக்கு உத்திரவாதம்.

லட்சுமிராய்க்கு படத்தில் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.. வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், லாரன்ஸை முத்தமிடுகிறார். ஜஸ்ட் ஃபார் பிஸினஸ் வேல்யூ. அம்மணிக்கு அவ்வளவுதான் வேலை.. லாரன்ஸூக்கும் லட்சுமிராய்க்கும் இடையே காதல் வருவதற்கு சொல்லப்பட்டிருக்கும் டெக்னிக்.. ஐயோ தாங்க முடியலைடா சாமி…

பாதிப்படத்திற்கு மேல் நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார். இவரா? இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? என்று நம்பவே முடியாமல் ஆச்சர்யத்தில் அதிர்ந்துதான் போகிறோம். அவர் பாடிலேங்குவேஜாகட்டும், மேனரிசமாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும் எல்லாமே கைத்தட்டலை அள்ளுகிறது.. கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் இது போன்ற சவாலான கதாபாத்திரத்திலும்கூட நான் நடிப்பேன் என்று சரத்குமார் புகுந்து விளையாடி இருப்பது ஆச்சர்யமளிக்கிறது, மூத்த நடிகர்களுக்கு கதாபாத்திர தேர்வுகளில் சரத் இந்தப்படத்தின் மூலம் ஒரு முன்னோடியாய் மாறி இருக்கிறார் வெல்டன் சரத்ஜி.. ஹாட்ஸ் ஆஃப்.. நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா. சரத்குமாரின் அந்த கதாபாத்திரத்தை சொல்வதைவிட, திரையில் பார்ப்பதில்தான் அத்தனை சுவாரஸ்யம்.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம்.

படம் முழுக்க நல்ல காமெடியாக? இருந்தாலும், திகில் காட்சிகளில் குலை நடிக்க வைத்து விடுகிறார்கள். தமனின் பின்ணனி இசை நன்றாக இருக்கிறது ஆனால் இன்னும் கொஞ்சம் பயமுறுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கேமரா கோணங்களில் பெரிதாய் பயமுறுத்தாமல் சின்னச் சின்ன ஷாட்களில் நம்மை ஜில்லிட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இது போன்ற திகில் படங்களில் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே அதை மன்னித்து விடலாம்.

வெறும் திகில் படம் என்று நினைக்காமல் அதில் ஏதாவது நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த லாரன்ஸ், திருநங்கைகள் சமூகத்தின் கஷ்டத்தை இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். அதையும் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் சொல்லியிருக்கும் லாரன்ஸ் ‘காஞ்சனா’வை கச்சிதமாக செதுக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.

காஞ்சனா – அசத்திட்டா!

நடிகர்கள்

லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமி ராய், சரத்குமார், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன்

இசை: எஸ். தமன்

இயக்கம்

லாரன்ஸ் ராகவேந்திரா

தயாரிப்பு

லாரன்ஸ் ராகவேந்திரா

Other also read:

அமைதி தான் உலகின் மிகச் சிறந்த ஆயுதம்: ஜீவா

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்
கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்…

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

‘ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்…. காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது ‘எ பிலிம் பை விஜய்’ என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் – நா முத்துக்குமார்

இசை – ஜீவி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு – நீரவ்ஷா

எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து – இயக்கம் – விஜய்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

Other also read:

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்

தேநீர் விடுதி
பந்தல் கான்ட்ராக்டராக வரும் ஹீரோ, பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை. இதுல தேநீர் விடுதி எங்கே வந்தது என கேட்பவர்களுக்கு… ஹீரோ, ஹீரோயினுக்கு ரூட் போடறதே பெட்டிக்கடைக்கு எதிரே உள்ள டீக்கடையிலிருந்துதான்.

‘பூ’ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் ‘களவாணி’, ‘விருந்தாளி’, ‘நெல்லு’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!

கொடுமுடி சுரேஷ், ஆதித் சகோதரர்கள், கிராமத்து விசேஷங்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்பவர்கள். அண்ணன் சுரேஷுக்கு அத்தை மகளை திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. தம்பிக்குப் பிறகுதான் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஜோதிடர் கொளுத்திப்போட, தம்பிக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் அண்ணன்.

அதே ஊரில் இருக்கும் சார்பதிவாளர் பிரபாகர், கடமை தவறாத அதிகாரி. அவரால் பாதிக்கப்படும் ஒருவர், அவரை அவமானப்படுத்துவதற்காக, அவரது மகள் பருவத்துக்கு வந்து விட்டதாகப் பொய் சொல்லி, பந்தல் போடச் சொல்கிறார். இரவோடு இரவாக பந்தல் போட்டு திரும்புகிறார்கள் சகோதரர்கள். இதனால் கொதித்தெழும் சார்பதிவாளரின் மகள் ரேஷ்மி, ஆதித்திடம் மல்லுக்கட்டுகிறார். கடைசியில் அதுவே காதலாகிறது. குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காத சார்பதிவாளருக்கு குடிகார மருமகனை எப்படி பிடிக்கும்? அமெரிக்க மாப்பிள்ளைக்கு மகளை கட்டி வைக்க முயற்சிக்கிறார். அப்பாவின் திட்டம் ஜெயித்ததா? மகளின் காதல் ஜெயித்ததா என்பது மீதி கதை.

ஆதித் தாடி வைத்த ஜெய்யின் காப்பியாக இருக்கிறார். முகபாவம், மேனரிஸத்திலும் அவரையே ஞாபகப்படுத்துகிறார். சமீபகாலமாக இதே மாதிரியான கிராமத்து தெனாவட்டு ஹீரோக்களை நிறையவே பார்த்து விட்டதால், ஆதித் கேரக்டர் இம்ப்ரஸ் செய்யவில்லை.

ஹீரோயின் ரேஷ்மி அம்சமான அழகு என சொல்ல முடியாவிட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார். ரேஷ்மியிடம், என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார் கேமரா ஆக்ஷன் என்றதும் உடனே காதல்கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.

சார்பதிவாளர் நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரபாகரனை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.

அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக்கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!

ஹீரோவுக்கு அண்ணனாக வரும் கொடுமுடி சுரேஷ், ரசிகர்களை சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய உடல்மொழியை பார்த்து சிரிப்பு வந்தாலும், போகப் போக அதுகூட அலுப்பு தட்டுகிறது.

ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் இருவரில் குணாவின் சீரியஸ் பார்வைகூட நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்க மறுக்கிறது.

ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம். ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக், ஓப்பனிங் ஃபைட், ஃபினிஷிங் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்தமைக்கும் ஒரு பலே.

மகள் காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், தந்தை மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓட, அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எல்லோரும் பின்தொடர, அவரோ காதலன் போட்ட பந்தலை எரிக்கிறார். சார்பதிவாளர் அலுவலகத்தில் தன்னை அறியாமலேயே தன் மகளுக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட சோகத்தில், கதவைப்பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள, எல்லோரும் பதட்டத்துடன் கதவைத் தட்ட, அதுவரை குடிக்காதவர், இப்போது குடிக்கத் தொடங்கியிருப்பார். இப்படி சில திடீர் திருப்ப காமெடிகள் படத்தை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால் பெண் வயதுக்கு வரும் விஷயத்தை வைத்து காமெடி செய்வது ரொம்ப ஓவர்.

குடும்பத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் காதலனுடன் ஓடிப்போவதிலும், பின்பு காரணம் அறிந்துகொள்ளாமலேயே வீட்டுக்கு திரும்புவதும், பிறகு அப்பாவின் திட்டம் அறிந்து மனம் மாறி காதலுடன் செல்வதிலுமாக, ஹீரோயின் ஆடும் கபடி ஆட்டத்தில் அழுத்தம் மிஸ்ஸிங். வில்லன் செயலிலும் சுவாரஸ்யம் இல்லை.

படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும், ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சாவதானமாக எழுந்து பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே…? இத்தனை பேர் வந்திருக்காங்களே? என கேட்பது படு மொக்கை….

சார்பதிவாளர் மகள் ஏன் பெட்டிக்கடை நடத்தணும்? பெட்டிக்கடை நடத்தும் பெண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையா? அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா.. இயக்குநர் சார்? பொண்ணு வேணாம்னு போன மாப்பிள்ளை திரும்ப ஏன் வர்றாரு? இப்படியே கேட்டுட்டே போனா நிறைய கேட்கலாம்.. பாவம்! புதுசுனால மன்னிச்சாச்சு. அதவிடுங்க, படத்துல அழகான ரெண்டு விஷயம்: ஒன்னு படத்தோட டைட்டில் டிசைன். டீ நுரை சூப்பர். அப்புறம் ரேஷ்மியோட கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ். ஒளிப்பதிவாளர் மணவாளன் இதுல கொஞ்சம் மின்னுகிறார்.

தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் படத்தில் பாடல்களை திணிக்காமல் தேவைப்பட்ட இடங்களில் மட்டும் அளவான பாடல்களை கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட். ‘ஜில்லென சிரிப்பாளோ, நெஞ்சுக்குள் இனிப்பாளோ…’ செம மெலோடி. பாடல் வரிகளுக்கும், மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ்.. அதே போல் ‘அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே…’ பாடல் வரிகளும் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது…

காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக்குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ஒருமுறை சிரித்து ரசிக்கலாம். ஒரு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.குமரன், ஒரு இயக்குநராக வெற்றி பெற இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

தேநீர் விடுதி – பார்லி டீ!

நடிகர்கள்

ஆதித், ரேஷ்மி மேனன், கொடுமுடி சுரேஷ், ஸ்வேதா, குணா, பிரபாகர், பெரிய கருப்பத்தேவர்

இசை

எஸ்.எஸ்.குமரன்

இயக்கம்

எஸ்.எஸ்.குமரன்

தயாரிப்பு

எஸ்.அனுஷாதேவி, எஸ்.எஸ்.குமரன்

Other also read:

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

எனது இயக்கத்தில் கண்டிப்பாக விஜய் நடிப்பார்: சீமான்

வேங்கை – விமர்சனம்
ஹரியின் மசாலா தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கும் இன்னுமொரு ‘அருவா வேலு’ கதை, இந்த வேங்கை!

சிவகங்கையில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்குபவர் ஹீரோ தனுஷ். இவரது கண்ணியமிக்க அப்பா ராஜ்கிரண். பையன் இப்படி உதவாக்கரையாய் இருக்கிறானே என்று வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். தனுஷோ, ஊரைவிட்டுப் போக வேண்டும் அவ்வளவுதானே… நான் திருச்சிக்குப் போகிறேன், என்று கிளம்புகிறார்.

திருச்சிக்கு வந்து பார்த்தால்…. பால்ய சினேகிதி தமன்னா! இருவருக்கும் வழக்கம் போல காதல்…

இன்னொரு பக்கம் ராஜ்கிரணின் நண்பனாக இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது மோசடிகளால் எதிரியாகிறார். இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ் ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள்.

இதில் யார் ஜெயித்தார்கள் என்பது… தமிழ் சினிமா காணும் ஆயிரத்திலோராவது க்ளைமாக்ஸ்.

செல்வம் என்ற பாத்திரத்தில் வேங்கையாக சீறுகிறார் தனுஷ். அவரது உருவத்துக்கும் இந்த அடைமொழிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் எழுப்பாமல், சமர்த்தாகப் படம் பார்த்தால் கடைசி காட்சி வரை உட்கார முடியும்… இல்லாவிட்டால் உங்கள் பாடு!!

தமன்னா செம க்யூட். நடிக்க நிறைய வாய்ப்பு தந்திருப்பதாக ஹரி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் படத்தில் அப்படி ஒன்றுமில்லை. ஆனாலும் வருகிற காட்சிகளிலெல்லாம் கண்களை நிறைக்கிறார் அழகாக. கதாநாயகியின் வேலை அதானே!

வழக்கம்போல கண்ணியத்தின் மறுபெயர் ராஜ் கிரண். மனதில் நிற்கிறார்.

சிங்கம் படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு… முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ் ராஜ்.

வடிவேலுவின் அருமையைப் புரிய வைக்கிறார் கஞ்சா கருப்பு. அடுத்தவாட்டி நல்லா முயற்சி பண்ணுங்க கருப்பு.

தேவி ஸ்ரீ தேவி இசையில் சொல்லிக் கொள்ளும்படி பாடல்கள் இல்லை. இந்த மாதிரி படங்களுக்கென்றே வைத்திருக்கும் ரெடிமேட் பின்னணி இசை. கஷ்டம்!

ஆனால் வெற்றியின் காமிரா கலக்கல். விடி விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான ‘கட்’களால்தான்!

செல்போன் டெக்னிக், டாடா சுமோ பறப்பது, விஷ்க் விஷ்க் என்று பேசும் அரிவாள்… இப்படி ஹரி க்ளிஷேக்கள் இந்தப் படத்திலும் தொடர்வது அலுப்புதான் என்றாலும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது. அது ஹரி என்ற இயக்குநரின் கமர்ஷியல் திறமை.

அந்த வகையில், ஹரியின் வேங்கை ‘ஓடும்’!

நடிப்பு- தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

இயக்கம்: ஹரி

தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ்

Other also read:

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

ஜூலை 21 முதல் ‘வேலாயுதம்’ பாடல்கள்

15ந் தேதி வருகிறாள் ‘தெய்வத்திருமகள்’

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

உதயன்
ஒரு கொலைக்கு காரணமானவனை தேடும் தேடுதல் வேட்டைதான் கதை.

மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஷ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக அப்பு என்ற ரவுடிதான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார் ஆசிஷ் வித்யார்த்தி.

சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் வசந்தாக அருள்நிதி, அறிமுக நாயகியாக பிரணிதா(பிரியா) என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எதேச்சையாக இந்த இரண்டு பேருக்கும் இடையேயான முதல் சந்திப்பு சிறு விபத்தில் நிகழ்கிறது. அதாவது, அருள்நிதி சென்று கொண்டிருக்கும் பைக் எதிர்பாராத விதமாக பிரணிதாவின் பைக்கின் மீது மோதுகிறது. அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் பிரணிதாவின் முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார். ஒருநாள் பிரணிதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக பிரணிதாவும் அருள்நிதியிடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது.

பிரணிதாவின் தந்தை ஒரு பெரிய தாதாவிடம் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசந்த்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி அருள்நிதியை கண்டவுடன் மிரண்டு போய், கத்தியால் குத்திவிட, அப்போது அங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் ‘அப்பா’ என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. அருள்நிதி யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்காக அருள்நிதியின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா? இப்படி பல கேள்விகளுக்கு வள வளன்னு விடையளிக்கிறது க்ளைமாக்ஸ்!

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத் தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்ஷன். தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்துகிறார் அருள்நிதி. இரண்டு கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார். சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்… சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தால் அவரா இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சமாகவே இருக்கிறார். நல்ல உயரம். சண்டை காட்சிகளில் திமிறியிருக்கிறார். ஆனால் நடிப்பென்று வரும் போது படு செயற்கை. ரீயாக்ஷனும் பாடி லாங்வேஜ்ஜும் ஒத்துவரலைனா கூலிங் கிளாசை போட்டு ஒப்பேத்திடலாம்னு யாராச்சும் சொல்லியிருப்பாங்க போல..! ஆனா.. சும்மா சொல்லக்கூடாது போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட்டாகவே இருக்கிறார்.

கதாநாயகி பிரணிதாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சோ ஸ்வீட்.. நேர்த்தியான முகம், நல்ல முகபாவங்கள், ஒல்லியான உடல்வாகு செம கியூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்ஷன் தான் வருது.

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது சந்தானம் தான். இரட்டை அர்த்தத்தில் பேசினால் மட்டுமே காமெடி என்று சந்தானத்திடம் யாரோ சொல்லி இருப்பார்கள் போல. அப்பப்பா… காது கூசுது. இந்த வட்டத்தை விட்டு சந்தானம் வெளியே வந்தா இன்னும் நல்ல காமெடிகளை தரமுடியும்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதை எண்பதுகளில் வந்த ரஜினி, கமல் படங்களை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் சாப்ளின் பழைய படங்களை உல்டா பண்ணி எடுத்திருப்பார் போல… பழைய படத்தின் கதையை புது விதமாய் யோசிக்காமல் பழசாகவே எடுத்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் டச் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது அழகு.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ். ‘இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்’ பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும், ஹீரோயின் முக அழகை 100% மெருகேற்றி காட்டுகிறது. கிஷோரின் கத்திரி ஆங்காங்கே மழுங்கிப்போச்சு. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்த இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரி திடீர் என ‘யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல’ என்ற மோசமாக டப்பாங் குத்துப்பாடல்களை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்துள்ளார். அபார்ட்மெண்ட்டில் ஹீரோ-ஹீரோயின், சிறுவர்-சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை அருமை.

ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும், டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடுரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே.. அதெப்படி?…. இப்படியே சின்னச் சின்ன கேள்விகள் இயக்குநரை கேட்கதான் தோணுது. இருந்தாலும் சற்றே புத்திசாலித்தனமான வசனங்களால் ஒருவழியா தம் பிடிச்சு ஒக்கார வச்சிட்டாரு.

உதயன் – அஸ்தமித்துப்போன விடியல்!

நடிகர்கள்

அருள்நிதி, பிரணிதா, சந்தானம், ஆசிஷ் வித்யார்த்தி, சாய்ரவி, மனோபாலா, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீரஞ்சனி, பானு

இசை

மணிகாந்த்

இயக்கம்

சாப்ளின்

தயாரிப்பு

பிரபாகரன்

Other also read:

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

வேங்கை – விமர்சனம்